இஸ்லாமிய இளைஞனே எழுச்சிகொள்

இஸ்லாமிய இளைஞனே உனக்கெதிராக
வன்முறை தலைவிரித்தாடுகிறது ….!
முஸ்லிம்களை அழிக்க
முகவரி இல்லா பாசிச கும்பல்….!
முற்றும் துரந்த முனிவன் வேடத்திலும்
நாட்டு பற்று நிறைந்த வேடத்திலும்
முகமூடியுடன் அலைகின்றது…….!

முழுவதும் நம்பி
முகம் குப்புர வீழ்ந்து விடாதே………!

இஸ்லாமிய இளைஞனே எழுச்சிகொள்……….!
உன் முன்னோர்கள் தூங்கி இருந்தால்……!
முஸ்லிம்களுக்கு என ஏது தனி வரலாறு

உன் முன்னோர்களோ…………..!
யுசுப் கான் என்ற பெயரிலும்
திப்பு சுல்தன் என்ற பெயரிலும்
வீரர்களாய்……….! தீரர்களாய்……….!
அஞ்சா நெஞ்சம் படைதவர்களாய்………!
அன்னியன் நடுங்க காரணமாய்
திகழ்ந்தார்களே………!

எண்ணிப்பார்…..! இன் நாட்டிற்கு உழைத்த உன்
முன்னோர்களை எண்ணிப்பார்………!
எத்தனை ஆயிரம் பேர் ……..!
ஓர் நாள் உனக்கும் இறப்புண்டு -அது
உன்னை தொடும் முன் விழித்தால்
உனக்கு மதிப்புண்டு…………!

எழுச்சிபெரு….! தூங்கியது போதும்…….!
எழுச்சிபெரு…………..!
இந்நாடு உன் தாய்நாடு நீ பாசிச
கும்பலை போன்று
எங்கிருந்தும் பிழைக்க வந்தவனல்ல
நீ அகதியும் அல்ல

உன் பெயரும் வரலாற்றில்
பொன்னெழுத்துக்களால்
பொரிக்கப்பட
வேண்டுமே………..!

இன்று எழுச்சிபெற மறுத்தால் இனி என்றும்
எழுச்சிபெறமுடியாமல் அமுக்கப்படுவாய்.
உன் எழுச்சிக்காக காத்திருக்கிறது
ஒரு சமூகம்…
இஸ்லாமிய இளைஞனே எழுச்சி கொள்…!

About வலையுகம் அலீம்

Check Also

எப்போது புரியும் உமக்கு

சத்தியத்தை கண்டும் காணாமல் போகிறாய்… அசத்தியத்தை காணத் தேடி அழைகிறாய்…மெய் மறந்து வாழும் மானிடனே… எப்போது புரியும் உமக்கு… சாத்தியத்தை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *