மூட்டை சுமப்பது மட்டும் வலி அல்ல. பழியை சுமப்பதும் பெரும் வலி தான். பழியை சுமப்பது சாதாரண உடல் வலி அல்ல. அது மனம் சார்ந்த வலி. அதை யாராலும் அவ்வளவு எளிதில் உணரமுடியாது முஸ்லிம்களை தவிர. ஏனெனில் எல்லாக் காலத்திலும் எல்லா சூழலிலும் பழியை சுமந்து சுமந்து அதன் வலியை உணர்ந்தவர்கள் முஸ்லிம்கள்.
ஊரடங்கு பிறப்பிக்கப்படும் முன்பே பல மாநிலத்திலிருந்தும் வந்து ஓரிடத்தில் ஒன்று கூடியவர்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின் தங்கள் ஊர்களுக்கு செல்லமுயாமல் அதே இடத்தில் தங்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியது அரசா அல்லது தப்லீக் ஜமாத்தா? போதிய கால அவகாசம் கொடுக்காமல் அதிகாரத் திமிரில் ஆணை பிறப்பித்தது அரசு. அதையும் ஏற்று வந்த இடத்திலேயே இருந்தவர்கள் குற்றவாளிகளாம். என்ன கொடுமை சார்… சொந்தமாநில மக்களை சங்கிகள் படுகொலை செய்து கொண்டிருந்த போது தனக்கு அதிகாரம் இல்லை என்று சப்பை கட்டு கட்டிய கெஜ்ரிவால் இன்று முஸ்லிம்கள் மீது வழக்கு தொடுக்க ஆணை பிறப்பிக்க முடிகின்றது என்றால், தானும் ஒரு சங்கி தான் என்று கெஜ்ரிவால் உறுதிபடுத்தியுள்ளார்.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட அன்று சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல இலட்சக் கணக்கான மக்கள் ஒன்று திரண்டு சென்றார்களே அப்போது நாடே வசை பாடியதே. அது போல இவர்கள் சென்றிருந்தால்… அதற்கும் இதே கொரோனா ஜிஹாத் என்ற பெயரையே வைத்திருப்பார்கள். தனக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்டினி…
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு பாபர் மஸ்ஜித் (இருந்த) இடத்தில் கோவில் கட்ட ஒரு கூட்டத்தை கூட்டி அங்கு விழா நடத்திய உபி சங்கிகளின் தலைவனை பற்றி இந்திய ஊ(ட)கங்கள் பேசுமா? எவன் பழியை சுமக்கும் இளிச்ச வாயன் என்று தேடி பழி போடும் மானங்கெட்ட ஊ(ட)கங்கள் சங்கிகள் மீது பழி சுமத்துமா? அப்படியே சுமத்தினாலும் சங்கிகள் சும்மா இருப்பார்களா? என்னங்காடா உங்க தர்மம்…??
கனிகா கபூர் கொரோனா நோயாளி மார்ச் 14ல் பாஜகவின் முக்கிய தலைவர்களை எல்லாம் சந்தித்தாரே, அதிலெல்லாம் கொரோனா பரவாது… ஏனென்றால் அவர்கள் முஸ்லிம்கள் அல்ல… இதையெல்லாம் பற்றி ஊ(ட)கங்கள் வாய் திறக்காது…. கேட்டால் ஊடக தர்மம்.?? ஜக்கி சாமியாரின் மஹா சிவராத்திரி கூட்டத்தை பற்றி கேள்வி கேட்குமா இந்த மானங்கெட்ட ஊ(ட)கங்கள்.
வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் நாட்டிற்குள் நோய் வரும் முன் தற்காப்பை ஏற்படுத்த தவறிய அரசின் தவறை அவரகள் சார்ந்த கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமியே பேசுகின்றார் என்றால் இதில் முஸ்லிம்களின் தவறு என்ன? இதை எல்லாம் ஊ(ட)கங்கள் பேசவே பேசாது, ஏனென்றால் ஊ(ட)க தர்மம் அப்படி.
அரசின் தோல்வியை மறைக்க முஸ்லிம்கள் மீது பழி சுமத்தும் தந்திரத்தை ஊ(ட)கங்களின் துணையோடு அரசே செய்யும் அராஜகமே இந்த கொரோனா ஜிஹாத்.
ஆக்கம்
முத்துப்பேட்டை அலீம்