இராணுவப் படுகொலை யாருக்கு ஆதாயம்?

ஒட்டுமொத்த உலகமே திரும்பிப்பார்த்த நிகழ்வு தான் இம்ரான்கானின் இராஜதந்திரம். கண்ணுக்கு மையழகு, கவிதைக்குப் பொய்யழகு என்ற பாடல் வரிகளுக்கேற்ப பிரதமருக்கு இராஜதந்திரம் தான் அழகு. ஆனால் நமது நாட்டின் சாபக்கேடு நமது பிரதமருக்கும் பொய்யழகாய்  அமைந்துவிட்டது. 2014ல் ஆரம்பித்த பொய் பித்தலாட்டம் இன்றும் தொடருகின்றது. நாட்டின் மிக முக்கிய துறை இராணுவம். அந்த இராணுவத்தை கூட விட்டு வைக்காத மோசடி அரசியல் செய்யும் மோடியை துரத்தியடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

ஊடகங்கள் ஊடகங்களாக இல்லாமல் மோசடிக்கும்பலுக்கு ஒத்து ஊதும் ஊதுகுழலாய் மாரிவிட்டிருக்கின்றது. நமது நாட்டில் என்ன நடக்கின்றது என்பதை வெளிநாட்டின் ஊடகத்தின் மூலமாகத்தான் அறிய முடிகின்றது என்றால் என்ன கூந்தலுக்கு இங்கே மீடியா?

நடந்த நிகழ்வுகள் அனைத்துமே ஏதோ திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகமாகத்தான் தெரிகின்றது. 44 இராணுவத்தினர் கொல்லப்பட்டது யாரால் என்ற கேள்வி அப்படியே உள்ளது. ஜெய்ஷ் இ முஹம்மது அமைப்பு பொருப்பேற்றுக்கொண்டதாம். யாரிடம் எந்த இடத்தில் யார் பொருப்பேற்றுக்கொண்டது என்ற எதுவும் எவனுக்கும் தெரியாது. அவ்வளவு தீவிரவாதிகளும் பார்டருக்கு அருகிலேயே வீடுகட்டி வசிக்கின்றார்களாம். கேட்பவன் கேனையனாக இருந்தால் கேப்பையில் நெய் வடியுமாம். 

300க்கும் மேற்பட்ட கிமீ தொலைவு வரை எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் முகாமிற்கு மிக அருகில் நடக்கின்றது என்றால் இராணுவம் அந்த அளவிற்கு அசட்டையாக இருந்தது என்று அர்த்தமா? இல்லை மோசடி கும்பலின் வஞ்சகத்தால் நடந்ததா? என்ற கேள்வி எந்த மனிதனுக்கும் ஏற்படத்தான் செய்யும். அதை அரசு தான் தெளிவு படுத்த வேண்டும்.

நமது நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாய் இருக்கின்றது என்றால் அங்கிருந்து எப்படி ஆர்டிஎக்ஸ் பாம் இங்கு வர முடிந்தது? அப்படி வந்த பாம் எப்படி காரில் முகாமின் அருகில் கொண்டுவர முடிந்தது? அதன் எடையை சரியாக எடை போட்டு சொன்னது யார்? இப்படி அடுக்கிக் கொண்டு செல்லும் கேள்விகளுக்கு எந்த பதிலும் இல்லாமல் யாரை நம்புவது?

எந்த ஒரு முஸ்லிமும் தீவிரவாதத்தை ஆதரிக்கவோ அதற்கு உடந்தையாகவோ இருக்க மாட்டான். உங்கள் கூற்றுப்படியே இஸ்லாமியர்கள் தான் செய்தார்கள் எனில், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர வசதியாக வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பனா? என்ன?

மிக முக்கியமாக, பாஜகவிற்கு இஸ்லாமிய எதிர்ப்பும் பாக்கிஸ்தான் எதிர்ப்பும் தான் பலம் என்பது ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் தெரிந்த ஒன்று தான். இந்த தாக்குதலால் பாக்கிஸ்தானுக்கோ அல்லது இஸ்லாமியர்களுக்கோ என்ன ஆதாயம்? நாட்டின் பாராளுமன்ற பொதுத் தேர்தல் வருகின்றது என்றால் அதில் கவணம் செலுத்தி மோசடிக் கும்பலை வீட்டுக்கு அனுப்ப எத்தனிப்பானே தவிர பாஜக ஆட்சிக்கு வர வசதியாக வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க மாட்டான்.  ஆனால் இந்த தாக்குதலால் உண்மையான ஆதாயம் யாருக்கு கிடைக்கும் என்பதை பாக்கிஸ்தானோ, அல்லது இந்தியர்களோ அறியாதவர்களா? என்ன?

இராணுவப் படுகொலையை தனது அரசியல் ஆதாயத்திற்காக செய்ததே என்பது நிதர்சனம். மோ(ச)டிக்கும்பல் நாட்டின் ஒட்டு மொத்த துறையையும் நாசமாக்கி வருகின்றது என்பது மட்டும் நிதர்சனம்.

அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்

About வலையுகம் அலீம்

Check Also

என்னங்க சார் உங்க சட்டம்

1. கொரோனா வைரஸ் உலகெங்கும் கடுமையாக பரவி வந்த நிலையில் எவ்வித முன்னேற்பாடும் செய்யாமல் நமக்கென்ன போக்கோடு செயல்பட்ட அரசு, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *