இஸ்லாமும் முஸ்லிம்களும் பகுதி 1

அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
மிக நீண்ட இடைவெளிக்குப்பின் தொடர் கட்டுரையின் வாயிலாக தங்களை சந்திப்பதில் மகிழ்கிறேன். சமுதாய சீர் திருத்த கருத்துக்களை கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் பல்வேறு தருணங்களில் நம் சமுதாயத்திற்க்கு கொடுத்துள்ளேன். அதன் வரிசையில் இந்த தொடர் கட்டுரை பயனுள்ளதாகவும், சிந்தனைகளை தூண்டுவதாகவும் அமையும் என்று நம்புகிறேன்.
இஸ்லாமும் முஸ்லிம்களும் என்ற தலைப்பினை கண்டதும் ”அட எல்லோரும் சொல்வது தானே” என்று சளித்துக்கொள்ள வெண்டாம். இந்த கட்டுரை சற்றே வித்தியாசமாக இருக்கும். நம்புங்களேன்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இன்றைய இஸ்லாமியர்களையும், ஈமானையும் பற்றி பல்வேறு முன்னறிவிப்புகளை செய்துவிட்டுத்தான் சென்றிருக்கின்றார்கள். அவர்களின்  வார்த்தைகள் வெறும் ஏட்டளவில் அல்ல, நடந்துகொண்டுள்ள அதிசயங்கள். ஆனாலும் அதனை சாதாரணமாக புறந்தள்ளும் மனப்பக்குவத்தை சைத்தான் நாமனைவருக்கும் தந்துள்ளான். படைத்தவனை விட அவனால் படைத்து சபிக்கப்பட்டவனுக்கே கட்டுப்படும் மக்களாக அல்லவா மாறிவிட்டிருக்கின்றோம்.
எங்கோ எவனோ எதேச்சையாக ஒரு முன்னறிவிப்பை செய்துவிட்டால் அதனை பற்றி பேசுவதும், சொன்னவனை போற்றுவதும், வாழ்த்துவதுமாக அம்மனிதனை மறவாமல் நினைவில் நிறுத்திக்கொள்ளும் மனிதன், மனிதனால் கற்பனை செய்து பார்க்கமுடியாத காலத்தில் எத்தனையோ முன்னறிவிப்புகளை அறிவித்த முஹம்மது நபியை மறந்து கொண்டே வருகின்றான்.
விங்ஞானிகள் கணிக்கும் கணிப்பை நம்பும் நாம், ஏதோ பெயருக்கு மட்டுமே நபியை நம்புகின்றோமா? என்பதை ஒவ்வொறுவரும் தனக்குள்ளாக கேள்வி கேட்டுக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
நபியை ஒருவன் கார்டூன் வரைந்து இழிவுபடுத்திவிட்டான் என்று பொங்கி எழும் நாம் அன்றாடம் அந்த நபியை இழிவுபடுத்தும் வேலையைத்தானே செய்து வருகின்றோம்.
இது அபாண்டமான பழி என்று உங்களுக்குள் சொல்லிக்கொள்கின்றீர்களா? அப்படியல்ல, நிச்சயமாக இது தான் உண்மை. நீங்கள் வெறுத்த போதிலும் இதனை தவிர்த்து உண்மை இல்லை.
ஆம்… அதனையே இந்த தலைப்பின் கீழ் உரக்க சொல்ல இருக்கின்றோம்…
இன்ஷா அல்லாஹ் 2ம் பகுதியில் தொடர்ந்து பார்ப்போம்.

About வலையுகம் அலீம்

Check Also

தர்மம் தலைகாக்குமா? தக்க சமயத்தில் உயிர்காக்குமா?

தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்ற பழமொழிக்கேற்ப இஸ்லாமிய சமூகம் இந்நாட்டில் எங்கு அசம்பாவிதங்கள் நடந்தாலும் இயற்கை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *