தட்டிக் கேட்கத்தான் இல்லையே தலைமை

ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றிட வேண்டிய முல்லைகளே…
நாம் மற்றவர் முன்னால் மண்டியிட்டாலே மலிவது தொல்லைகளே…வார்த்தை ஜாலங்களை வாக்குறுதிகளை கேட்டு மயங்குகின்றாய்…
அவை ஓட்டு பொருக்கிட போட்டிடும் வேடத்தில் பாதைகள் மாறுகின்றாய்…நம்மில் ஒற்றுமை இல்லாததாலே….
நம்மை ஏய்பவர் ஏமாற்றும் நிலையே…

கால காலமாய் வஞ்சிக்கும் நிலைமை…
தட்டி கேட்கத்தான் வந்தாச்சி தலைமை…

இது சாதாரண வரிகளல்ல… தமுமுகவின் இலட்சோப இலட்ச தொண்டர்களின் மனங்களில் ஆழப்பதிந்த தமுமுகவின் கொள்கை பாடல்களில் ஒன்று.

ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றிப்பிடிக்க எங்களுக்கு உபதேசம் செய்துவிட்டு நீங்கள் விட்டு விட்டீர்களே… இன்று ஒற்றுமை என்றால் என்னவென்றே தெரியாத நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றோமே… நியாயமா?

மற்றவர்கள் முன்னால் மண்டியிடாதே, அப்படி மண்டியிட்டால் உனக்கு பெரும் தொல்லைகள் தான் உண்டாகும் என்று எச்சரிக்கும் போது உண்மை என்றே உங்களை நம்பினோமே… ஆனால் மண்டியிட துணிந்துவிட்டதை பார்த்து பரிதாபப்படுவதா?  தேம்பி அழுவதா? புரியாத நிலையில் விட்டு விட்டீர்களே.. நியாயமா?

நம்மில் ஒற்றுமை இல்லாததால் தான் நம்மை எல்லோரும் ஏமாற்றி கொண்டிருக்கின்றார்கள், ஏய்த்துக்கொண்டிருக்கின்றார்கள் என்று எங்களுக்கு சொல்லி சொல்லி வளர்த்த நீங்கள் இன்று ஒற்றுமையை குழி தோண்டி புதைக்கின்றீர்களே… நியாயமா?

நாங்களும் நம்பினோம் காலங்காலமாய் வஞ்சிக்கும் நிலைமையை தட்டி கேட்கத்தான் வந்தாச்சி தலைமை என்று…

இப்போது தான் புரிகின்றது… கால காலமாய் வஞ்சிக்கும் நிலைமை
தட்டிக் கேட்கத்தான் இல்லையே தலைமை என்று.

வருத்தத்துடன்
முத்துப்பேட்டை அலீம்

About வலையுகம் அலீம்

Check Also

ஈதுல் ஃபித்ர்- நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

கண்ணியமிக்க மாதமான ரமலான் இவ்வாண்டு நமக்கு பல படிப்பினைகளை கற்றுக் கொடுத்துள்ளது. இவை எல்லாம் அல்லாஹ்வின் சோதனைகளில் ஒன்று என்ற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *