இஸ்லாமும் முஸ்லிம்களும் பகுதி – 2

அன்பிற்கினிய சமுதாய சொந்தங்களே…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
முதல் பகுதியில் நாம் குறிப்பிட்டது போல நமது இஸ்லாமிய சமூகம் எப்படியெல்லாம் தடம் புறண்டு செல்கின்றது என்பதை இனி பார்க்க உள்ளோம்.
இன்றைய நாகரீக உலகில் எது சரி, எது தவறு, எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது, எது தீங்கு, எது நன்மை என்று எந்த ஒன்றையும் பிறித்து அறிய முடியாமல் இந்த உலகமே திக்கித் தடுமாறி வருகின்றது. நாகரீகம் என்ற பெயரால் அனாகரீக ஆபாசங்கள் பெருகி விட்டிருக்கின்றன, அறிவாற்றல் என்ற பெயரால் ஒரு பக்கம் சமூக மேம்பாட்டு வளர்ச்சி என்றாலும் அந்த அறிவின் மூலமே கீழ் தரமான நிகழ்வுகளும் இவ்வுலகில் நிலை கொண்டிருக்கின்றன. எத்திசை திரும்பினும் கற்ப்பழிப்பு, கொலை, கொள்ளை, வன்முறை, பயங்கரவாதம், தீவிரவாதம், லஞ்சம், ஊழல், என உலகம் முழுதும் 24 மணி நேரங்களும் ஒவ்வொருவரின் காதுகளிலும் ஒலித்துக்கொண்டிருக்கும் மிக மோசமான சூழல் நிலவிவருகின்றன.
இவற்றுக்கு தீர்வு தான் என்ன?, இந்த நிலை மாற்றப்பட வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?, யார் நினைத்தால் மாற்றத்தை ஏற்ப்படுத்த முடியும்?
தீர்வுகள் இல்லாத பிரச்சினைகளே இல்லை. எல்லா வகையான பிரச்சினைக்கும் கண்டிப்பாக தீர்வுகள் உள்ளன. அப்படியானால் தீர்வு எங்கே உள்ளது? அது 1400 ஆண்டுகளுக்கு முன்பே வழங்கப்பட்டு விட்டது. அதனை எங்கே எங்கே என்று தேடிக்கொண்டு எங்கெல்லாமோ இந்த உலகமே அலைந்து கொண்டிருக்கின்றது.
ஆம்… அது முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அகிலத்தின் ரப்பாகிய அல்லாஹ்வால் வழங்கப்பட்டு பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. மிக உன்னதமான அந்த தீர்வை கண்டும் கானாமல் இந்த உலகமே சென்றுகொண்டிருக்கின்றது. சரி அந்த அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்களை ஏற்றுக்கொண்ட சமூகமாவது அந்த தீர்வை ஏற்கின்றதா? என்றால் அங்கே மிகப்பெரும் மவுனமே பதிலாகும்.
”முஃமின்களே! உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை); அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்; அவன் அவர்களை நேசிப்பான்; அவனை அவர்களும் நேசிப்பார்கள்; அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்; நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்; இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்; இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்; அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 5:54)”
இவ்வாறு அல்லாஹ் தனது திருமறையில் முஸ்லிம்களை எச்சரிக்கின்றான்.
ஆனாலும் நம் மக்களோ இவை நமக்கல்ல யாருக்கோ என்று நினைத்துக்கொண்டு கர்வமுடன் இவ்வுலகில் நடமாடி வருகின்றனர். அல்லாஹ்வின் தண்டனை இவர்களுக்கு முன்னுள்ளோர் மீது எவ்வாறு இறங்கியது என்பதை சிந்திக்க வேண்டாமா? இதனை வல்ல இறைவனே கேட்கின்றான்.
“பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து (உங்களுக்கு) முன்னிருந்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்? அவர்கள் பெரும்பாலோர் முஷ்ரிக்குகளாக (இணை வைப்பவர்களாக) இருந்தனர்” என்று (நபியே!) நீர் கூறும்.
(அல்குர்ஆன் : 30:42)
அல்லாஹ் தனது இறுதி வேதத்தில் பூமியில் சுற்றித் திரிந்து முன்னிருந்தவர்களின் முடிவை பார்க்கச் சொல்லுகின்றான். அவைகளை நாம் கண்டும் கூட பராமுகமாகவே வாழ்ந்து கொண்டுள்ளோம். இறைவனின் கோபப் பார்வைகள் எப்படிப்பட்டது என்பதை இஸ்லாமிய சமூகமே உணர்ந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொறு விதமான குற்றங்களை செய்த ஒவ்வொரு கூட்டத்தார்களுக்கும் அவர்களின் குற்ற நடவடிக்கைகளை அவர்களுக்கு தடுத்து, விலக்கி, நேர்வழியை காட்டுவதற்கே இவ்வுலகில் பல லட்சம் நபிமார்கள் வந்து சென்றுள்ளார்கள். ஆனால் இன்றைய நாகரீகத்தின் பெயரால் என்ன நடக்கின்றது..?
இன்ஷா அல்லாஹ்… பகுதி 3ல் தொடருவோம்.

About வலையுகம் அலீம்

Check Also

தர்மம் தலைகாக்குமா? தக்க சமயத்தில் உயிர்காக்குமா?

தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்ற பழமொழிக்கேற்ப இஸ்லாமிய சமூகம் இந்நாட்டில் எங்கு அசம்பாவிதங்கள் நடந்தாலும் இயற்கை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *