தமிழக முஸ்லிம்களில் பெரும்பாலோர் இஸ்லாமிய மார்க்கத்தின் மகத்தான இலட்சியமான ஓர் இறைக்கொள்கை என்னும் தவ்ஹீதை விட்டு வெகுதூரமாக நெடுங் காலமாக இருந்து வந்தனர். அல்லாஹ்விற்கு இணை வைக்கின்ற மாபாதக செயலில் மூழ்கிக் கிடந்தனர்.. தவ்ஹீத் என்றால் என்ன? அதற்கு எதிரான ஷிர்க் என்றால் என்ன? என்ற விளக்கங்கள் தமிழக முஸ்லிம்களுக்கு நீண்ட நெடியகாலமாகத் தெரியாமலேயே இருந்தது.
