முத்துப்பேட்டையில் சுமார் 13 பள்ளிவாசல்கள் உண்டு. இங்கு ஒவ்வொறு பள்ளிக்கும் தனித்தனி நிர்வாகம் உண்டு. அந்தந்த முஹல்லாக்களை சேர்ந்தவர்களே நிர்வகிக்கின்றனர். அதில் தவறில்லை. ஆனால் நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கான தகுதி என்ன என்பது தெரியாத நபர்களைக்கூட முக்கிய பொருப்புகளில் அந்த முஹல்லாவாசிகள் நியமிக்கின்றார்கள்.
இங்கு தான் மிகப்பெரும் குழப்பம் ஏற்படுகின்றது. அல்லாஹ்வை பற்றிய ஞானம் இல்லாத, அல்லாஹ்வின் ஷிஃபாஅத்துக்களை பற்றிய அறிவில்லாத, மார்க்கத்தை சரியாக விளங்கிக்கொள்ளாதவர்கள், பொய்யர்கள், தற்புகழ்ச்சி, தற்பெருமை பாடும் மடையர்களையும் மேலும் படித்தவன் போர்வையில் ஜாஹிலிய்யாக் கால மக்கத்து காஃபிர்களை மிஞ்சும் அளவிற்கு மேடை தோறும் பேசித்திறியும் நபர்களையும் நிர்வாகத்தில் புகுத்துகின்றனர். இது எனது கற்பனை கதையல்ல. உண்மையான நிலை. இன்னும் குறிப்பாக ஒரு பள்ளியின் நிர்வாகி ஒருவர் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பண்புகளையும் தன்னகத்தே கொண்டவராக இருக்கின்றார். அவரின் அறியாமையை, மடமையை, முட்டாள் தனத்தை, பற்றி இங்கு சொல்வது மற்ற நிர்வாகிகளுக்கு நல்ல பாடமாக அமையும் என கருதுகின்றேன்.
அவரின் அறியாமை உளரல்களில் சில :
அல்லாஹ்வால் அனைத்து மனிதர்களையும் திருப்திப்படுத்த முடியாது. (அஸ்தஹ்ஃபிரல்லாஹ்)
எல்லோருக்கும் எல்லோரும் நல்லவனாக இருக்க முடியாது, அந்த வாய்ப்பு ஆண்டவனுக்கு (அல்லாஹ்விற்கு) கூட கிட்டவில்லை. (அஸ்தஹ்ஃபிரல்லாஹ்)
கடவுளோடு (அல்லாஹ்வோடு) தாயை ஒப்பிடாதீர்கள். எந்த தாயும் தன் பிள்ளையின் கஸ்டங்களை பார்த்துக்கொண்டு கல்லாய் இருப்பதில்லை. (அஸ்தஹ்ஃபிரல்லாஹ்)
இது மட்டுமல்லாமல் தான் ஒரு மிகப்பெரிய, மாவட்டத்தின் முதன்மை ரவுடி என்றும் பேசித்திரிகின்றார்.
அல்லாஹ்வின் வேத வரிகளான அல்குர்ஆனை கேளிக்குள்ளாக்கும் விதமாக அவரின் இஸ்டத்திற்கு (அரபியில்) படித்து சம்மந்தமில்லாத விளக்கம் கொடுக்கின்றார்.
இவையனைத்தும் எனது சொந்த கற்ப்பனையல்ல முத்துப்பேட்டை வாட்ஸ் அப் விவாத குழுமத்தில் 210 பேர் மத்தியில் ஒரு பள்ளியின் முஹல்லா செயலாளரின் உளரல்களே.
இப்படிப்பட்டவர்களை நிர்வாகப் பொருப்புகளில் அமரவைத்து அழகு பார்க்கும் என் சமுதாயமே… நாளை அல்லாஹ் உங்களை கேள்வி கேட்க மாட்டான் என்ற மன தைரியமா?
அல்லாஹ்வின் பள்ளிகளை நிர்வகிக்கத் தகுதியானவர்கள் ஊரில் இல்லையா? அல்லது தகுதிகள் என்ன என்பது தெரியவில்லையா? அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.
وَاِذَا قِيْلَ لَهُ اتَّقِ اللّٰهَ اَخَذَتْهُ الْعِزَّةُ بِالْاِثْمِ فَحَسْبُهٗ جَهَنَّمُ وَلَبِئْسَ الْمِهَادُ
“அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்” என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது; அவனுக்கு நரகமே போதுமானது நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிக்கக் கேடானதாகும்.
(அல்குர்ஆன் : 2:206)
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்