பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
(அளவற்ற அன்பாளன் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகின்றேன்.)முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது :
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ
(அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக)வாக்குறுதி கொடுக்கும் போதும், எதிர்கால ஏற்பாடு, திட்டம் போடும் போதும்: :
இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்)
ஒருவரை அல்லது எது ஒன்றையும் புகழ்வதற்கு :
ஸுப்ஹானல்லாஹ்
(அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்),
மாஷா அல்லாஹ்
(அல்லாஹ் நாடினால்)
ஒரு முஸ்லிம் தும்மினால் :
அல்ஹம்துலில்லாஹ்
(எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே)
அருகில் தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ் சொன்னால் :
யர்ஹமுகல்லாஹ்
(அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக)
துக்ககரமான செய்தி அல்லது மரண செய்தி அறிந்தால் :
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காவே இருக்கிறோம்; நிச்சயமாக நாம் அவனிடமே மீளப் போகிறோம்)
விரும்பத்தகாத செய்தியை கேட்டால் அல்லது கண்டால் :
நவூதுபில்லாஹ்
(நாம் அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாவல் தேடுகின்றோம்)
லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்
(அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் சக்தி இல்லை)
ஒருவருக்கு நன்றி சொல்ல :
ஜஷாக்கல்லாஹ் ஹைர்
(உங்களுக்கு அல்லாஹ் நல்ல வெகுமதியை வழங்குவானாக)
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்