கருப்புப் பணம் வெறுப்பு அரசியல்

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்று ஒரு சொல் வழக்கு தமிழில் உண்டு. அது போல மோடியின் நாளொரு பேச்சும் பொழுதொரு செயலும் இந்திய மக்களை முகம் சுழிக்க செய்கின்றது என்றால் அது மிகையல்ல.கருப்பு பணத்த ஒழிக்கின்றேன் என்கிற பெயரில் பொதுமக்களை ஒழித்துக் கட்டிவரும் கோமாளித்தனத்தை அரங்கேற்றி வருகின்றார்கள். இருபத்தொன்றாம் நூற்றாண்டில் ஹிட்லரின் திட்டங்களையும், செயல்பாடுகளையும், 100 சதவீதம் பின்பற்றும் ஒரே தலைவராக மோடி திகழ்கிறார்.

பணமில்லா பரிவர்த்தனை (cashless) என்பது 100% சதவிகிதம் கல்வியறிவு பெற்றால் மட்டும் தான் சாத்தியம். இது சாதாரண 8ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு கூட தெரியும். நாட்டை ஆளும்வர்க்கத்திற்கு தெரியாதா? இவர்கள் முட்டாள்கள் அல்ல, மக்களை முட்டாளாக்கும் திட்டமே இவர்களின் முதன்மையான திட்டம்.

நாட்டின் சுதந்திரப்போர் நடைபெற்ற போது கூட சுதந்திர போராட்ட தியாகிகளை காட்டிக் கொடுத்தவர்களிடம் நாட்டை ஆள அனுமதித்தால் இதுவல்ல இதற்க்கு மேலும் அனுபவிக்க வேண்டும்.

கருப்பு பணம் என்றால் என்ன என்று கூட தெரியாத அப்பாவி மக்களைத் தவிர வேறு எவனும் இவர்களின் கருப்பு சட்டத்தால் பாதிப்படையவில்லை என்பதே உண்மை.

பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சமூக விரோதிகள் அனைவரும் புதிய நோட்டை பதுக்கி விட்டார்கள். அதற்கான ஆதாரம் இதோ…

பத்திரிக்கைகளில் வந்த ஒரு சில செய்திகளை மட்டுமே பட்டியலிட்டுள்ளேன்.

1. பழைய ரூ.500,1000 தாள்கள் செல்லாது என்ற பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில் குஜராத் அஹமதாபாத்தில்  உள்ள இரண்டு துறைமுக அதிகாரிகள் ரூ.2.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் வாங்கிய லஞ்சப்பணம் புதிய ரூ 2 ஆயிரம் நோட்டுகளாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
17 நவம்பர் 2016 ஒன் இந்தியா தமிழ்

2. பெங்களூரில் ரூ.4.7 கோடி புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்.
01டிசம்பர் 2016, தின மணி

3. கர்நாடக மாநிலம், உடுப்பியில் ரூ.71 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஞாயிற்றுக் கிழமை, 04 டிசம்பர் 2016 தினமணி

4. பெங்களூரில் புதிய நோட்டுகள் ரூ.5.70 கோடி பிடிபட்டது. தமிழக அமைச்சரின் உறவினர் உள்பட 7 பேர் திடீர் கைது
வியாழக்கிழமை,  08 டிசம்பர் 2016 தினகரன்

5. குஜராத் மாநிலத்தில் போலீசார் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் நேற்று ஈடுபட்டனர். சூரத்தில் ஒரு காரை நிறுத்தி அதில் இருந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை செய்தனர். மேலும் காரில் சோதனை செய்தபோது 38 கட்டுகள் கொண்ட புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ.76 இலட்சம்  இருந்தது தெரியவந்தது.
சனிக் கிழமை, 10 டிசம்பர் 2016 தினத்தந்தி

6. சென்னை சவுகார்பேட்டை தரகர்கள் மூலம் ரூ80 கோடிக்கு புதிய நோட்டுகள் மாற்றினேன்: சேகர் ரெட்டி ஒப்புதல்
10 டிசம்பர் 2016 ஒன் இந்தியா தமிழ்

7. பனாஜி  – கோவா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக இருவரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சனிக் கிழமை, 10 டிசம்பர் 2016 தின பூமி

8. ஹைதராபாத்தில் ரூபாய் 70 இலட்சம் புதிய ரூபாய் நோட்டுக்கள் சிக்கியது. 3 பேர் கைது.
10 டிசம்பர் 2016 தி இந்து

இவர்கள் மக்களின் உணர்வுகளைத் தூண்டி அரசியல் செய்து இலாபம் பார்க்கும் அயோக்கியர்கள் என்பதற்கு இதைவிடவும் ஒரு ஆதாரம் தேவை இல்லை. மேலே குறிப்பிட்டுள்ள மோசடிகள் வெளி உலகிற்கு தெரிந்தவைகளில் ஒரு சில மட்டுமே.

மக்களை ஏய்த்து பிழப்பு நடத்தும் இவர்களை நாட்டை விட்டும் விரட்ட வேண்டிய தருணம் விரைவில்…

அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்

About வலையுகம் அலீம்

Check Also

என்னங்க சார் உங்க சட்டம்

1. கொரோனா வைரஸ் உலகெங்கும் கடுமையாக பரவி வந்த நிலையில் எவ்வித முன்னேற்பாடும் செய்யாமல் நமக்கென்ன போக்கோடு செயல்பட்ட அரசு, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *