இன்றைய நாகரீக உலகம் தினம் தினம் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகின்றது. மிக முக்கியமாக அறிவியல் பார்வையும் ஆன்மீக தேடலும் அதிகரித்து வருகின்றது. மேற்க்கத்திய நாடுகளில் வாழும் மக்கள் மன அமைதிக்கும், வாழ்வின் நிம்மதிக்கும் ஒரு ஆன்மீக வாழ்வை தேர்வுசெய்ய தவியாய் தவித்த நேரத்தில் பல சமயங்களையும், சமூகங்களையும் உற்று நோக்கி இறுதியாக தேர்வு செய்யும் மதமாக இஸ்லாம் மட்டுமே உண்டு. அதற்கான காரணம் அறிவியல் ரீதியான எவ்வித முரண்பாடுகளும் இல்லாத ஒரு மார்க்கம் உலகில் உண்டெனில் அது இஸ்லாம் மட்டுமே என்பதை உணர்ந்ததே ஆகும்.
இஸ்லாம், மிகப்பெரும் பழிச்சொற்களால் வசைபாடப்பட்ட போதும், தூற்றுதலுக்கு உள்ளாக்கப்பட்ட போதும், எவ்வித பாதிப்பும் அடையாமல் அதற்கு மாறாக அதிவேக வளர்ச்சிப் பாதையில் பயணிப்பது பலருக்கு வியப்பையும், ஆச்சர்யத்தையும், சிலருக்கு பீதியையும், பயத்தையும் உண்டுபண்ணுகின்றது என்றால் அது மிகையல்ல.
அவ்வாறு வியப்பும், ஆச்சர்யமும் ஏற்பட்ட பல்லாயிரக்கணக்கானோர் இன்று சத்திய இஸ்லாத்தை முழு மனதோடு வரவேற்று, ஏற்றுக் கொண்டு வருகின்றனர். பீதியும், பயமும் ஏற்பட்ட சிலர் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் ஒழித்து கட்ட வேண்டும் என்று முயன்று வருகின்றனர். இதில் இரண்டாம் வகையை சேர்ந்தவர்களே இஸ்லாத்தின், முஸ்லிம்களின் எதிரிகளான சங் பரிவார் கூட்டம். இவர்களுக்கு ஏற்பட்டிருப்பது மத வெறியா? மரண பயமா? என்பதை ஆய்வதே இக்கட்டுரை.
சுழலும் வாழ்க்கை சக்கரத்தில் மாற்றத்தை விரும்புவது மனித இயல்பு. என்னதான் வாழ்க்கை பயணம் சீராகவும், சிறப்பாகவும் சென்றாலும், இதைவிட மேன்மையானது உண்டா என தேடும் தேடல் மனிதனின் இயல்பு. மாற்றத்தை விரும்பி மாறிய பின்னர் தான் முந்தைய வாழ்வின் அருமை புரியும். நிழலின் அருமை வெயிலில் புரியும் என்பதைப் போல.
ஆம் அப்படித்தான் இந்தியாவின் வரலாறும்.
800 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த முஸ்லிம்களின் ஆட்சியில் அதிக அதிருப்திகள் இல்லை என்பதை 800 ஆண்டுகள் ஆளுவதற்கு மக்கள் வாய்ப்பளித்ததே சான்று. சிலர் அடிமை படுத்தி வைத்திருந்ததால் தான் ஆள முடிந்தது என சொல்லக் கூடும், ஆனால் அடிமை படுத்தப்பட வில்லை என்பதற்கு ஏராளமான சான்றுகள் இன்றும் உள்ளன. இந் நாட்டின் வளங்களை இதே நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவுமே பயன் படுத்தியுள்ளனர். சில வேளைகளில் தனது சொந்த நாட்டிற்கும் சிறிதளவு எடுத்துச் சென்றிருக்கலாம். ஆனால் அது சொர்ப்பமே.
முஸ்லிம்கள் நம்மை ஆழ்வதா என கர்வம் கொண்ட சிலர் மாற்றங்களை விரும்பிய இந்தியர்களில் சிலரையும் தங்களோடு இணைத்துக் கொண்டு அரசுக்கு எதிராக பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது என நம்பிய நிலையில் ஆங்கிலேயர்களின் உதவியை நாடினர். அதன் விளைவாக கிடைத்த வாய்ப்பை பயன் படுத்தி நமது நாட்டின் வளங்களை கொள்ளையிட ஆங்கிலேயன் ஆசை கொண்டான். அடிமை படுத்தினான். ஆனால் ஆங்கிலேய ஆட்சியை சிறு காலங்கள் கூட மக்களால் ஜீரனிக்க முடியவில்லை. ஆங்கிலேயர்களின் ஆட்சி 200 ஆண்டுகள் கடந்த நிலையில் மக்கள் புரட்சி காரணமாக நாட்டை விட்டு ஆங்கிலேயர் வெளியேறினர்.
அதன் பிறகு சுதந்திர இந்தியாவில் 50 ஆண்டுகளைக் கூட நம்மால் கடக்க முடியாத அளவிற்கு நீதியற்ற நிலையும், சமூக அவலங்களும், மீண்டும் இஸ்லாமிய ஆட்சியை நோக்கி மக்களை கொண்டு சென்றுவிடுமென பயந்த சங்பரிவார்களின் பயமும் மற்றும் காங்கிரஸ்ஸின் பயமும் தான் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழித்தொழிக்க துடியாய் துடிப்பதற்கு காரணமாகும்.
அதனால் தான் வரலாறுகளும் மறக்கடிக்கப்படுகின்றன.
தன் வரலாற்றை அறியாத சமூகம் அழிந்து போகும்.
மாற்றம் ஏற்படும்…. ஏனெனில் வாழ்க்கை என்பது சுழலும் சக்கரம்.
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்.