என்னங்க சார் உங்க சட்டம்

1. கொரோனா வைரஸ் உலகெங்கும் கடுமையாக பரவி வந்த நிலையில் எவ்வித முன்னேற்பாடும் செய்யாமல் நமக்கென்ன போக்கோடு செயல்பட்ட அரசு, பொதுமக்களை குற்றாவாளியாக்கியது.2. கொரோனா பரவத் தொடங்கிய வேளையில் முஸ்லிம் சமூகத்தை கொரோனா நோயோடு தொடர்பு படுத்தி பீலாவை கொண்டு (பீலா) அவதூறை பரப்பியது அரசு, பின் அரசே, நோயை மதத்தோடு தொடர்பு படுத்தாதீர் என்று அறிவிப்பு செய்தது.

3. மக்களை சமூக இடைவெளி விடச்சொல்லி வலியுறுத்தி விட்டு அரசை வழிநடத்தும் பிரதிநிதிகளான எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்டமாக மக்களை சந்தித்து சமூக இடைவெளியை சந்தி சிரிக்க செய்தது.

4. மருத்துவர்களும், செவிலியர்களும், தூய்மைப் பணியாளர்களும், காவலர்களும் தவிர்த்து மற்றவர்கள் முகக் கவசம் அணிய வேண்டாம் என்று பல மருத்துவர்கள் விளக்கமளித்த நிலையில்முகக் கவசம் இல்லாமல் வெளியில் சென்றவர்களை காவல்துறை வேட்டையாடியது.

5. வாடகை வீட்டில் வசிப்பவர்களிடம் வீட்டின் உரிமையாளர்கள் 3 மாதம் வாடகை வசூலிக்க கூடாது என்று அரசு உத்தரவிட்டது. ஆனால் வம்படியாக வாடகை வசூல் நடந்தது மட்டுமல்லாமல் வாடகை கொடுக்க முடியாத மக்களை வீட்டைவிட்டு, பச்சிளம் குழந்தைகளோடு துரத்த கூடிய நிகழ்வும் நடந்தது.

6. மாதாந்திர இஎம்ஐ வசூலிக்க கூடாது என வங்கிகளுக்கு உத்தரவிட்டது அரசு, ஆனால் பைனான்ஸில் தொழில் தொடங்கிய சிறு வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், வாடகை கார் ஓட்டுனரிடம் இஎம்ஐ கட்டாயமாக வசூலிக்கப்பட்டும் அரசு கண்டும் காணாமல் இருக்கிறது.

7. நாளொன்றுக்கு ஐந்து வேளை முகம் கை கால்களைக் கழுவி சுத்தம் செய்து தொழுகையை நடத்தும் முஸ்லிம்கள் பள்ளிவாசலில் கூடக்கூடாது, குளித்து முழுகி கோவில்களில் சாமி கும்பிட இந்துக்கள் செல்லக் கூடாது, கிருத்தவர்கள் வழிபாட்டுத் தலங்களில் எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என்றெல்லாம் சட்டம் போட்ட அரசு, சுத்தம் என்றால் என்னவென்றே தெரியாத தற்குறி குடிகாரர்கள் ஒன்று கூடி கும்மாளம் இடுவதற்கு மட்டும் அனுமதித்திருக்கிறது.

8. யாரும் வெளியில் செல்ல வேண்டாம் வேலைகளுக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லி வீட்டிலேயே இருக்கச் சொன்ன அரசு, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு எந்த வழியையும் காட்டாமல் நட்டாற்றில் விட்டது போல் விட்டது மட்டுமல்லாமல், அவர்களிடமே கொரோனா நிவாரண நிதி தாருங்கள் என்று கையேந்தியது.

9. பேரிடர் மீட்பு நிதி பல லட்சம் கோடி ரூபாய்கள் பிரதமரின் நிவாரண நிதிக்கான புதிய வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் வெளி மாநிலங்களிலிருந்து சொந்த ஊர் திரும்பும் ஏழை மக்களுக்கு பயணக் கட்டணம் வசூலிக்கக் கூடிய அரசாகவே உள்ளது.

10. நோன்பு காலங்களில் 2 பேர் சேர்ந்து கஞ்சி காய்ச்சி மக்களுக்கு கொடுக்க தடை, ஆனால் கிலோ மீட்டர் கணக்கில் குடிகாரர்களை நிற்க வைத்து சாராயத்தை அரசே விற்கும் அவலம்.

11. இதையெல்லாம் தாண்டிய ஒரு பிரம்மாண்டமான அரசின் முரண், கத்தார் அரசிடம் இந்தியர்களை இலவசமாக தாய்நாடு அழைத்துச் செல்கிறோம் என்கிற பெயரில் அந்நாட்டின் சிறப்பு சலுகைகளை பெற்றதும், மறுபுறம் தாய்நாடு திரும்பும் இந்தியர்களிடம் விமான டிக்கெட்டுக்கான பணத்தை பெற்றுக் கொண்டது தான்.

இதுபோல இன்னும் ஏராளமாய் அடுக்கிக் கொண்டே செல்லலாம். முன்னுக்குப் பின் முரணான அரசின் செயல்பாடுகள் அவ்வளவு உள்ளது.

இதையெல்லாம் பார்த்தால் “என்னங்க சார் உங்க சட்டம்” “என்னங்க சார் உங்க திட்டம்” ஜோக்கர் திரைப்பட பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது…

– முத்துப்பேட்டை அலீம்

About வலையுகம் அலீம்

Check Also

ஈதுல் ஃபித்ர்- நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

கண்ணியமிக்க மாதமான ரமலான் இவ்வாண்டு நமக்கு பல படிப்பினைகளை கற்றுக் கொடுத்துள்ளது. இவை எல்லாம் அல்லாஹ்வின் சோதனைகளில் ஒன்று என்ற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *