முஸ்லிம்களின் கனவு தேசம்

முஸ்லிம்களின் அதிக விருப்பத்திற்குறிய தேசம் எது என ஒரு கருத்துக் கேட்டால் முந்திக்கொண்டு முதலிடத்தை பிடிப்பது முஹம்மது நபி பிறந்த மண்ணாகத்தான் இருக்கும். முஸ்லிம்கள் தங்களது உயிருக்கும் மேலாக உலகில் நேசிக்கும் ஒரே மனிதரான முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்து, வளர்ந்து, ஆட்சி செய்த பூமி என்பதால் தான்.
உலக வரலாற்றில் எந்த தலைவரும் சாதித்திராத இனியும் சாதிக்க முடியாத மாபெரும் சாதனைகளை சாதித்த சாதனையாளர் அஸ்ஸாதிக் அவர்களின் மீது கொண்ட மட்டற்ற அன்பின் வெளிப்பாடாய் அரபு தேசத்தை நேசிக்கும் முஸ்லிம்கள் அம்மண்ணில் கால் வைக்கும் போது அவர்களின் மனநிலை சொந்த மண்ணில் தனக்காக ஆண்டுகள் பல காத்திருக்கபோகும் தன் குடும்பத்தை எண்ணி சற்றே மனம் வருந்தினாலும் மன்னர் முஹம்மது அவர்களின் மண்ணில் கால் வைக்க தனக்கு கிடைத்த மதிப்பிட முடியா வாய்ப்பை எண்ணி மனம் புண்ணகை பூக்கும்.
உலகில் பிறந்த எத்தனை முஸ்லிம்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று எண்ணி மனம் குதூகளிக்கும், அல்லாஹ்வின் முதல் அடியார் ஆதி பிதா ஆதம் தன் துணைவியாரை சந்தித்த மண், அல்லாஹ்வின் ஆதி மார்க்கம் நிலை திரும்பிய மண், அல்லாஹ்வின் ஆதி ஆலையம் நிலை பெற்ற மண், “ஆஹா… தனக்கு இப்படி ஒரு வாய்ப்பை வாரித்தந்த வல்லோனின் வல்லமையை எண்ணி மனம் ஆனந்த தாண்டவம் ஆடி மகிழும். இருக்கும் காலத்திற்குள் எத்தனை உம்ராக்களை முடிக்கலாம் என்று உள்மனம் கணக்குப் போடும். இந்த சந்தோசம், மகிழ்ச்சி, ஆனந்தம்,புண்ணகை எத்தனை நாள் நிலைத்திருக்கும் என்று வந்த யாருக்கும் புறிந்ததில்லை.
முஸ்லிம்களின் கனவு தேசம் கனவில் மட்டும் தான் கனவு தேசம் நிஜத்தில்?
எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழக் கூடாது? எதை உண்ண வேண்டும்? எதை உண்ணக் கூடாது? எதை உடுத்த வேண்டும்? எதை உடுத்தக் கூடாது? எதை பேச வேண்டும்? எதை பேசக் கூடாது? அண்டை வீட்டாரோடு அனுசரித்தல், சொந்தங்களை சார்ந்திருத்தல், ஏழைகளை அரவணைத்தல், அனாதைகளை ஆதரித்தல், நன்மைகளை ஏவுதல், தீமைகளை விட்டும் தடுத்தல் என அத்தனைக்கும் வழிகாட்டியாய் நபிகள் நாயகம் வாழ்ந்த மண். அவ் வழிகாட்டலை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்து வருகின்றது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் அது தான் உண்மை.
ஆழிய அன்பும், கூரிய பண்பும், நேரிய வழியும் நோக்கமாய் கொண்ட, நோவினை கொள்ளா நாயகம் வாழ்ந்த நல்லதொரு தேசம் – இன்று அன்பில்லா வாழ்க்கை, பண்பில்லா பழக்கம், நேரிய வழியில்லா நோக்கம், நோவினை கொண்ட உள்ளம் என தடுமாற்றத்தோடு பெரும் மாற்றத்தோடு பாதை மாறிய பயணத்தில் நரகம் நோக்கி நகரும் முஸ்லிம்களின் கனவு தேசம். அடிமைத்தனத்தை உடைத்தெறிந்த அண்ணல் நபி பிறந்த மண்ணில் அடிமைகளாகத்தான் நடத்துகிறார்கள் அன்னிய தேசத்து பணியாளர்களை.
அன்று நீரைக்கூட சிக்கனம் செய்ய சொன்னார்கள் நபிகள் நாயகம் இன்று செல்வத்தைக் கூட நீராய் இறைக்கிறார்கள் அரேபியர்கள். இசையை தடை செய்த மார்க்கத்தில் இசை இல்லா வாழ்க்கை இல்லை என்ற நிலை, அன்று இந்த சமூகத்தை எண்ணி கவலை கொண்ட நபி இன்று இருந்திருந்தால் கண்ணீர்விட்டு அழுதிருப்பார்கள்.
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்

About வலையுகம் அலீம்

Check Also

தர்மம் தலைகாக்குமா? தக்க சமயத்தில் உயிர்காக்குமா?

தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்ற பழமொழிக்கேற்ப இஸ்லாமிய சமூகம் இந்நாட்டில் எங்கு அசம்பாவிதங்கள் நடந்தாலும் இயற்கை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *