ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி மற்றும் சங்பரிவார கும்பலின் திட்டமே முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக அழித்தொழிக்க வேண்டும், நாட்டின் வளங்களை சுரண்டி உண்டு வாழ வேண்டும் என்பதுதான் என முற்போக்கு சிந்தனையாளர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் மக்களுக்கு எச்சரித்தும் மக்கள் அதனை ஏதோ அவர்கள் மீதுள்ள கால்புணர்ச்சி காரணமாக சொல்லப்படுவதாகவே நினைத்து வந்தனர். ஆனால் இன்று நடுநிலையான இந்திய மக்கள் மிகத்தெளிவாக விளங்கிக்கொண்டுவிட்டனர். ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி மற்றும் சங்பரிவார கும்பல் என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல மனிதகுலத்திற்கே எதிரான ஒரு அமைப்பு என்பதை புறிந்து கொண்டுவிட்டார்கள். ஆனாலும் இன்னும் மெளனம் காப்பது ஏன்?
மாட்டுக்காக சக மனிதனை அவன் ஒரு முஸ்லிம் என்பதால் படுகொலை செய்யும் போதும், அதனை ஆதரித்து பேசும் போதும், முஸ்லிம்களை பொது மேடைகளில் வம்பிற்கு இழுத்து பேசும்போதும், பாக்கிஸ்தான் போக சொல்லி பேசிய போதும், பொது சிவில் சட்டம் என முஸ்லிம்களுக்கு எதிராக பூச்சாண்டி காட்டும் வேளையில் இரங்கிய போதும், ஜாகிர் நாயக்கிற்கு எதிராக அவரை கைது செய்ய துடித்தபோதும், இன்று ஜாகிர் நாயக்கின் டிரஸ்டுக்கு தடை விதித்துள்ள போதும் இந்தியர்கள் மெளனம் காப்பது ஏன்?
ஒரு கதை இப்படி உண்டு…..
ஒரு நாட்டில் ஒரு கொடுங்கோளன் ஆட்சி செய்து கொண்டிருந்தானாம். அவனுடைய காவலர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு கூட்டத்தை அடித்து உதைத்து துண்புருத்தி சிறையில் அடைத்து கொடுமை படுத்தி வந்தானாம்.
முதலில் ஒரு வியாபாரியை காவலர்கள் அடித்து உதைத்து துண்புறுத்தி இழுத்துச் சென்றார்களாம். அந்த வியாபாரிக்காக வியாபாரிகள் அனைவரும் ஒன்றுதிரண்டு போராட முடிவு செய்து மக்களை அழைக்கும் போது ஒரு மனிதன் அதனை கண்டும் காணாதது போல், நான் ஒரு வியாபாரியல்லவே… நான் ஏன் அவனுக்காக நீதி கேட்டு போராட வேண்டும் என சொல்லிக்கொண்டானாம்.
அடுத்த நாள் ஒரு விவசாயியை காவலர்கள் அடித்து உதைத்து துண்புறுத்தி இழுத்துச் சென்றார்களாம். அந்த விவசாயிக்காக விவசாயிகள் அனைவரும் ஒன்றுதிரண்டு போராட முடிவு செய்து மக்களை அழைக்கும் போது அதே மனிதன் அதனை கண்டும் காணாதது போல், நான் ஒரு விவசாயி அல்லவே… நான் ஏன் அவனுக்காக நீதி கேட்டு போராட வேண்டும் என சொல்லிக்கொண்டானாம்.
அடுத்த நாள் ஒரு கம்யூனிஸவாதியை காவலர்கள் அடித்து உதைத்து துண்புறுத்தி இழுத்துச் சென்றார்களாம். அந்த கம்யூனிஸவாதிக்காக கம்யூனிஸவாதிகள் அனைவரும் ஒன்றுதிரண்டு போராட முடிவு செய்து மக்களை அழைக்கும் போது அதே மனிதன் அதனை கண்டும் காணாதது போல், நான் ஒரு கம்யூனிஸவாதியல்லவே… நான் ஏன் அவனுக்காக நீதி கேட்டு போராட வேண்டும் என சொல்லிக்கொண்டானாம்.
அடுத்த நாள் அம்மனிதனையும் அந்த காவலர்கள் அடித்து உதைத்து இழுத்துச் சென்றார்களாம். அப்போது அம்மனிதன் எனக்காக போராட யாரும் இல்லையா என கதறிக்கொண்டே போனானாம். அவனுக்காக போராட யாருமே இல்லையாம்.
இந்த நிலை இந்தியர்களுக்கு வரக்கூடாது எனில் இந்தியர்கள் அனைவரும் ஒன்றினைந்து போராட வேண்டும்.
இன்று என் சமூகம் என்றால் நாளை உன் சமூகமாகவும் இருக்கலாம் என்பதை உணருங்கள். இந்த கோட்சே குழு மனித குலம் அனைத்திற்குமே எதிரானது என்பது அவர்களின் ஒவ்வொரு மக்கள் விரோத அறிவிப்பின் மூலமும் மக்கள் தெளிவடைந்துவிட்டார்கள் ஆனாலும் மக்களின் மவுனம் ஏன்? என்பது மட்டும் புரியாத புதிராய் உள்ளது.
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்