தி காமென் மேன்

தி காமென் மேன் என அழைக்கபடும் ஒரு கார்ட்டூன் பாத்திரம் ஆர்.கே லக்‌ஷ்மன் என்பவரால் பூணேவில் உருவாக்கப்பட்டது. ஆர்.கே லக்‌ஷ்மன் இந்திய எழுத்தாளர் மற்றும் கார்ட்டூனிஸ்ட் ஆவார். அறை நூற்றாண்டு காலம் சாதாரண மனிதனின் நம்பிக்கை, அபிலாஷை மற்றும் பிரச்சினைகளை தினசரி காமிக் மூலம் மக்களுக்கு தெளிவு படுத்தினார். இந்த காமிக் மூலம் மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கியது 1951ல் என்று தி டைம்ஸ் ஆப் இந்தியா இதழில் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.கே.லக்‌ஷ்மன் தி டைம்ஸ் ஆப் இந்தியாவில் காமிக்ஸ் கார்ட்டூண்ட்கள் வரைய தொடங்கிய போது அவர் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் கலாச்சாரங்களிலிருந்தும் வரைய தொடங்கினார். இந்த மக்கள் செல்வாக்கு மிக்க காமிக்ஸ் கார்ட்டூன் ஒரு கட்டத்தில் சரிவடையத்துவங்கியது.
அதன் பிறகு இறுதியாக பிரபலமான காமென் மேன் கார்ட்டூன்களை  குறைவான மற்றும் குறைவான பின்னனி எழுத்துக்களை கொண்ட கார்ட்டூன்களாக வரையத்தொடங்கினார்.
பொதுவாக காமென் மேன் கார்ட்டூன்களின் நடவடிக்கை என்பது ஒரு அமைதியான சாட்சிகளாக காட்டப்பட்டன. மானிடவியல்வல்லுநர் ரிது கைரொலா கந்துரியின் கூற்றுப்படி காமென் மேன் வேட்டியுடனும் ஒரு பிளேசிட் ஜாக்கெட் உடையிலும் இருப்பது குழப்பமானது, மேலும் ஆர்.கே.லக்‌ஷ்மன் அவர்களின் கூர்மையான பார்வையில் அரசியல் சித்து விளையாட்டுக்களின் விபரங்கள் இல்லை என்று குறிப்பிடுகின்றார்.
1988 ல் தி டைம்ஸ் ஆப் இந்தியாவில் 150 ம் ஆண்டு நிறைவையொட்டி இந்திய தபால் சேவை காமென் மேன் தபால் தலை ஒன்றை வெளியிட்டது. இந்த அங்கீகாரம் தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில மொழி தினசரி பத்திரிக்கைக்கு மிகப்பெரிய உலகலாவிய அங்கீகாரமாகும்.
தி காமென் மேன் குறைந்த பட்ஜெட் விமான சேவையை தேடித்தருபவராகவும் இருந்தார். பிரிட்டீஸ் இந்தியன் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி 1995ல் எழுதிய நாவல் தி மூர்ஸ் லாஸ்ட் சைன் மற்றும் 2012ல் எழுதிய தனது சுயசரிதையான ஜோசப் அண்டனிலும் லக்‌ஷ்மன் பாக்கெட் கார்ட்டூன்களை குறிப்பிடுகின்றார்.
பூணேவில் உள்ள சிம்போசிஸ் இன்ஸ்டிடியூடின் விஸ்பவன் பில்டிங்கின் முகப்பு பகுதியில் தி காமென் மேனின் 8 அடி உயரமுள்ள வெண்கல சிலை நிருவப்பட்டுள்ளது. அது குழப்பமான நிலையில் வெண்மையான தலை முடியுடனும் நிரந்தரமாக நின்றுகொண்டுள்ளது. தி காமென் மேன் சிலை, சிற்பி சுரேஷ் சக்பால் என்பவரால் உருவாக்கப்பட்டு 2007ல் நிருவப்பட்டது.
விக்கி பீடியாவிலிருந்து…
மொழி மாற்றம்
முத்துப்பேட்டை அலீம்

About வலையுகம் அலீம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *