கண்ணியமிக்க மாதமான ரமலான் இவ்வாண்டு நமக்கு பல படிப்பினைகளை கற்றுக் கொடுத்துள்ளது. இவை எல்லாம் அல்லாஹ்வின் சோதனைகளில் ஒன்று என்ற எண்ணத்தோடு அந்த சோதனைகளை சாதனைகளாக மாற்றிய சமுதாய மக்களுக்கு எங்கள் வலையுகத்தின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.யா அல்லாஹ் இந்த ரமலானில் நாங்கள் செய்த அமல்களில் நல்லவை அனைத்தையும் ஏற்றுக் கொள்வாயாக. யா அல்லாஹ் இந்த ரமலானில் நாங்கள் அறியாமல் செய்துவிட்ட பாவங்களை மன்னித்து அருள்வாயாக. யா அல்லாஹ் இந்த ரமலானில் நாங்கள் செய்த நல்லமல்களை எதிர்வரும் காலங்களிலும் செயல்படுத்த பக்குவத்தையும், மன உறுதியையும், சிறந்த எண்ணத்தையும் தந்தருள்வாயாக.
எங்கள் வலையுகம் தளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த ஈதுல் ஃபித்ர்- நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.
அன்புடன்
வலையுகம்.காம்