செல்வ செழிப்புள்ள நாட்டினிலே
செம்மண்ணாக மாற்றிடவே
செருக்குடன் வருதே ரோட்டினிலே
அட்டைப் பூச்சிகள் ஆட்சிக் கட்டிலிலே
விட்டில் பூச்சிகள் எரியும் தீச்சட்டியிலே
தெளிவான பாதைகளை தொலைத்துவிட்டு
இழிவான பாதைகளை தேர்ந்தெடுத்தோம்
வெளிச்சம் என்று நம்பி போனால்
அச்சம் ஒன்றே மிச்சமானது
திராவிடமும் தோற்றது
தமிழனும் தோற்றான்
இனி மேயும் வேளியே பயிர்களை
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்