பிரதமர் மோடி வலியுறுத்தும் பாஜக தொண்டர்களின் அந்த ஏழு பண்புகள்
உதவும் குணம், சமத்துவம், பொறுமை, ஒருங்கிணைப்பு, இரக்கம், நேர்மறைச் சிந்தனை, கலந்துரையாடல் ஆகிய இந்த ஏழு பண்புகளும் நமது நாட்டின் பிரதமர் மோடி தனது கட்சித் தொண்டர்களிடம் எதிர்பார்க்கும் பண்புகளாம். இதுவெல்லாம் நம்பும்படியாகவா உள்ளது என்று நீங்கள் கேட்பது புரிகின்றது.
ஏனென்றால் இந்த குணங்களுக்கும் பாஜகவினருக்கும் எவ்வித ஒட்டு உறவும் இல்லை என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாய் உலகமே உணர்ந்து தான் இருக்கிறது.
உதவும் குணம் :
கொரோனா லாக்டவுனால் வேலை இழந்து, உண்ண உணவில்லாமல், உறங்க இடமில்லாமல் சொந்த ஊர் செல்ல வாகன வசதி இல்லாமல் நடந்தே சென்று உயிரிழந்த மக்களுக்கு உதவி இருந்தால் இன்று உலகமே போற்றி இருக்குமே. உதவி கூட செய்ய வேண்டாம், உதவும் உள்ளம் கொண்டவர்களுக்கு குடிக்க தண்ணீர் கூட கொடுக்க கூடாது என்று உத்தரவிட்ட ஒரு மாநில முதல்வரான உபி சாமியார் பாஜக அல்லவா? அவரின் உதவும் குணம் காணும் தொண்டர்களிடமும் அதே குணம் பிரதிபலிக்கத்தானே செய்யும்.
சமத்துவம் :
சமத்துவம், சகோதரத்துவம் இதில் துளியும் தொடர்பில்லாத அல்லது நம்பிக்கை இல்லாத வெறியர்களை மட்டுமே வளர்த்து வைத்துள்ள பாஜக அதன் தொண்டர்களிடம் எவ்வாறு அவற்றையெல்லாம் காணமுடியும். சமத்துவத்தை சவமாக்கி சதிகார ஆட்சிபுரிந்த, சரித்திரத்தின் இருண்ட ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்ற மோடியின் தலைமையை ஏற்று செயல்படும் பாஜக சமத்துவம் பற்றி பேசலாமா? அல்லது பேசத்தான் முடியுமா?
பொறுமை :
தனது கடும் போக்கையும் கொடும் போக்கையும் கட்டுப்படுத்த தெரியாத தற்குறிகளை மட்டுமே தலைவர்களாக பெற்ற ஒரு கட்சியின் தொண்டர்கள் பொறுமை கொண்டவர்களாக இருக்க எவ்விதத்திலும் வாய்ப்பில்லை.
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பார்கள் அப்படி பொறுமையோடு இருப்பவர்களையும் கூட தங்கள் கொடும் போக்குத் தனத்தால் சிதைத்து அழிக்கும் உங்கள் கூட்டத்திடம் பொறுமையை எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய மடமை.
ஒருங்கிணைப்பு :
வேற்றுமையில் ஒற்றுமை என்கிற தாரக மந்திரமே நமது நாட்டின் கொள்கை முழக்கம். அந்தக் கொள்கை முழக்கத்தை அழித்தொழித்து ஆழக் குழிதோண்டி புதைத்து மட்டுமே பழக்கப்பட்ட பார தீய ஜனதா கட்சி தம் தொண்டர்களிடம் ஒருங்கிணைப்பை எதிர்பார்ப்பதும் வலியுறுத்துவதும் என்னவிதமான லாஜிக்.
இரக்கம் :
குஜராத் இனக்கலவரம் தொடங்கி டெல்லி கலவரம் வரை பல்லாயிரக்கணக்கான உயிர்களை இரக்கமற்ற முறையில் படுகொலை செய்து, கர்ப்பத்தில் இருந்த பச்சிளம் சிசுவை கூட அறுத்தெறிந்த உங்களின் இரக்கம்கண்டு இந்த உலகமே வியந்து போனது. அதுபோன்ற இரக்க குணத்தை உலகம் உள்ளளவும் எவராலும் காட்ட முடியாது.
நேர்மறைச் சிந்தனை :
எதிர்மறை கருத்துக்களை மட்டுமே சித்தாந்தமாக, கொள்கை முடிவாக வைத்துக் கொண்டு நேர்மறை சிந்தனையை எதிர்பார்ப்பது என்ன வகையான எதிர்பார்ப்பு?
நேர்மறை சிந்தனைகளை சித்தாந்த விஷம் ஏற்றி எதிர்மறை சிந்தனையாக சிதைத்தே பழக்கப்பட்ட சங்கிகளின் கூட்டத்தில் நேர்மறைச் சிந்தனையை எதிர்பார்ப்பது என்ன வகையான எதிர்பார்ப்பு?
கலந்துரையாடல் :
தொலைக்காட்சிக் கலந்துரையாடல்களிலேயே உங்களின் கலந்துரையாடலின் இலட்சணத்தை ஒவ்வொரு நாளும் ஒட்டுமொத்த நாடும் பார்த்துக்கொண்டுதான் உள்ளது. வாதத்திற்கு எதிர் வாதம் புரிய வழியில்லாமல் வாய்க்கு வந்ததைச் சொல்லி வசைபாடும் வல்லூறுகளிடத்தில் கலந்துரையாடும் பக்குவத்தை எதிர்பார்ப்பது காண்டாமிருகத்திடம் கருணையை எதிர்பார்ப்பது போன்றது.
கனவாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?
இந்த ஏழு குணங்களில் ஒரு குணம் இருந்தாலும் அம்மனிதன் ஒருகாலும் பாஜகவில் இணைந்து இருக்க மாட்டான். இணைந்திருக்கவும் முடியாது.
இனியும் இது போல வாயால் வடை சுடுவதை விட்டுவிட்டு வாழக் கற்றுக் கொடுங்கள். உங்களை உலகம் போற்றும்.
நன்றி…