அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : புகாரி (6236)இந்த ஹதீஸின் அடிப்படையில் மிகச்சிறந்த இஸ்லாமிய பண்பு பசித்தவருக்கு உணவளிப்பதும் அறிமுகமானவர், அறிமுக மற்றவருக்கும் சலாம் சொல்வதுமாகும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.இந்த ஹதீஸில் பசித்தவருக்கு உணவு அளிப்பது என்று மட்டுமே வருகிறதே தவிர பசித்த முஸ்லிமுக்கு மட்டுமே உணவளிக்க சொல்லவில்லை. அறிமுகமானவருக்கும் அறிமுகம் அல்லாதவருக்கும் சலாம் சொல்ல சொல்கிறதே தவிர அவர் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கவில்லை. இது தான் இஸ்லாம்.
இது உங்கள் பார்வையில் அடிப்படைவாதமாக தெரிந்தால் நாங்கள் அடிப்படைவாதிகள் தான். அதனை தீவிரமாக செயல்படுத்தக்கூடிய நாங்கள் தீவிரவாதிகள் தான். இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் தான்.
2. அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து) விட்டார். அவரது இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான்.
அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி (2472)
பாதையில் கிடக்கும் முட்களை எடுத்து தூர எரிவதால் பயனடைவது ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. பயனடைவது யாராக இருந்தாலும் முள்ளைப் பார்ப்பவர் முஸ்லிமாக இருந்தால் அதை அவர் எடுத்து தூர எறிந்தால் அதுதான் நற்செயல் என்று அங்கீகரிக்க கூடியது தான் இஸ்லாம்.
இது உங்கள் பார்வையில் அடிப்படைவாதமாக தெரிந்தால் நாங்கள் அடிப்படைவாதிகள் தான். அதனை தீவிரமாக செயல்படுத்தக்கூடிய நாங்கள் தீவிரவாதிகள் தான். இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் தான்.
3. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்களுள் ஒருவர் தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர்.
அறி: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: ஸஹீஹ் புகாரி
வலக்கரம் கொடுக்கும் தர்மத்தை இடக்கரம் தெரியாமல் வாங்குபவர்கள் மானத்தோடு விளையாடாத வண்ணம் கொடுக்கச் சொல்லுவது தான் இஸ்லாம்.
இது உங்கள் பார்வையில் அடிப்படைவாதமாக தெரிந்தால் நாங்கள் அடிப்படைவாதிகள் தான். அதனை தீவிரமாக செயல்படுத்தக்கூடிய நாங்கள் தீவிரவாதிகள் தான். இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் தான்.
4. “உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் நீ சந்திப்பதும் தர்மமாகும்! என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்”
அறி: அபூதர் (ரலி), ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: திர்மிதி 2022, 2037)
தர்மத்திற்கு இப்படி ஒரு விளக்கத்தை கொடுத்த எந்த ஒரு மதத்தையும் யாராலும் காட்ட முடியாது. சகோதரனை மலர்ந்த முகத்தோடு சந்திப்பதும் கூட தர்மம் என்று சொல்லும் மார்க்கம் இஸ்லாம்.
இது உங்கள் பார்வையில் அடிப்படைவாதமாக தெரிந்தால் நாங்கள் அடிப்படைவாதிகள் தான். அதனை தீவிரமாக செயல்படுத்தக்கூடிய நாங்கள் தீவிரவாதிகள் தான். இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் தான்.
5. ”உன் சகோதரனின் முகத்தைப் பார்த்து புன்னகை புரிவது உனக்கு நல்லறமாகும். நீ நன்மையை ஏவுவதும் தீமையைத் தடுப்பதும் நல்லறமாகும். பாதை தவறிய மனிதருக்குப் பாதையைக் காட்டுவதும் உனக்கு நல்லறமாகும். பார்வையிழந்தவருக்குப் பார்வையாக நீ ஆவதும் உனக்கு நல்லறமாகும். பாதையில் கிடக்கும் கல், முள், எலும்பு போன்றவற்றை நீ அகற்றுவதும் உனக்கு நல்லறமாகும். உனது வாளியில் உள்ள தண்ணீரை உனது சகோதரரின் வாளியில் ஊற்றுவதும் உனக்கு நல்லறமாகும்.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : திர்மிதீ, இப்னு ஹிப்பான்
நல்லதைச் செய்ய ஏவுவதும் தீமைகளை விட்டு தடுப்பதும், பார்வை இழந்தவர்களுக்கு உதவி புரிவதும், கல், முள், எலும்பு போன்றவற்றை பாதையிலிருந்து அகற்றுவதும், தண்ணீரை அடுத்தவருக்கு கொடுப்பதும் நல்லறம் என்றும் அதைச் செய்ய வலியுறுத்தவும் கூடிய மார்க்கம் இஸ்லாம்.
இது உங்கள் பார்வையில் அடிப்படைவாதமாக தெரிந்தால் நாங்கள் அடிப்படைவாதிகள் தான். அதனை தீவிரமாக செயல்படுத்தக்கூடிய நாங்கள் தீவிரவாதிகள் தான். இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் தான்.
6. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! தமக்கு விரும்புவதையே தம் அண்டை வீட்டாருக்கும் அல்லது தம் சகோதரருக்கும் விரும்பாத எந்த அடியாரும் முழுமையான இறைநம்பிக்கையாளர் ஆகமாட்டார்.
அறி: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: ஸஹீஹ் முஸ்லிம்
தனக்காக விரும்பக் கூடிய ஒன்றை தன்னுடைய அண்டை வீட்டாருக்கும் தன்னுடைய சகோதரருக்கும் விரும்பக் கூடியவர் மட்டும்தான் உண்மையான இறை நம்பிக்கை கொண்டவர் என்று பாடம் நடத்தும் மார்க்கம்தான் இஸ்லாம்.
இது உங்கள் பார்வையில் அடிப்படைவாதமாக தெரிந்தால் நாங்கள் அடிப்படைவாதிகள் தான். அதனை தீவிரமாக செயல்படுத்தக்கூடிய நாங்கள் தீவிரவாதிகள் தான். இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் தான்.
7. “எவனொருவன் மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்”
அல்குர்ஆன் : 5:32
ஒரு மனிதனை கொலை செய்பவன் ஒட்டுமொத்த மனித சமூகத்தையும் கொலை செய்தவன் போன்று என்றும், ஒரு மனிதரை வாழவைத்தவர் ஒட்டுமொத்த மனித சமூகத்தை வாழ வைத்தவர் போன்று என்றும் சொல்லி பக்குவப்படுத்தி வளர்த்த மார்க்கம் இஸ்லாம்.
இது உங்கள் பார்வையில் அடிப்படைவாதமாக தெரிந்தால் நாங்கள் அடிப்படைவாதிகள் தான். அதனை தீவிரமாக செயல்படுத்தக்கூடிய நாங்கள் தீவிரவாதிகள் தான். இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் தான்.
இப்படி மனித நேயத்தை மட்டுமே வலியுறுத்தும் இஸ்லாம் ஒரு காலத்திலும் வன்முறையைப் போதிப்பது இல்லை. ஆனால் முஸ்லிம்களின் பெயரால் உலகம் முழுவதும் யூத வெறியர்களும், காவி வெறியர்களும், பௌத்த வெறியர்களும் கதை கட்டி முஸ்லிம்களை குற்றவாளிகளாக காட்ட முற்படக் கூடிய நிகழ்வை நிச்சயமாக நிரூபிக்க முடியும்.
يُرِيْدُوْنَ اَنْ يُّطْفِـــٴُـــوْا نُوْرَ اللّٰهِ بِاَ فْوَاهِهِمْ وَيَاْبَى اللّٰهُ اِلَّاۤ اَنْ يُّتِمَّ نُوْرَهٗ وَلَوْ كَرِهَ الْـكٰفِرُوْنَ
தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் நிராகரிப்பவர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.
(அல்குர்ஆன் : 9:32).
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்