போங்கடா நீங்களும் உங்க அரசியலும்

தமிழ் நாட்டுல மொத்த அரசியல் கட்சிகளில பாதி, முஸ்லிம் கட்சிகள் தான். இத யாரும் மறுக்க முடியுமா? முஸ்லிம்கட்சின்னு சொல்லிட்டு அலைர எந்த கட்சியும் முஸ்லிம்களோட மன நிலைய அறிஞ்சி அரசியல் செய்ரதில்ல. தன் கட்சியோட மன நிலைக்கு மக்கள திசை திருப்புராங்க…

நடந்து முடிஞ்ச சட்டமன்ற தேர்தல்ல 0.2% வாக்கு வாங்குன ஒரு முஸ்லிம் கட்சி நாங்க கூட்டணில இருந்தா திமுக ஆட்சிக்கு வந்துருக்கும்… எங்கள பகச்சிக்கிட்டதுக்கு தான் மக்கள் தீர்ப்பு கொடுதுட்டங்கண்ணு பீத்திக்கிட்டு அலையிது.

பொதுவா திமுக பாஜக வோட கூட்டணி வசிருந்தா கூட ஆட்சிய புடிசிருக்கும் அப்டிங்கிரது அரசியல் விமர்சகர்களோட கருத்து. நம்ம சமுதாயத்த மதிச்சி தான் திமுகவும் சீட்டு கொடுத்துச்சி. அவங்க அவங்க தகுதிக்கு தகுந்த மாதிரி இடங்கள் ஒதுக்குனுச்சி. கிடச்சத வாங்கிகிட்டு ஏதோ ஒரு சில தொகுதியில போட்டியிட்டு இருந்தா சமுதாயமும் நம்பிருக்கும்…

தன்மானம், மண்ணாங்கட்டி, தெருப்புழுதின்னு கத்திகிட்டு கெழுச்சிகிட்டு போனா இப்படித்தான்னு மக்கள் தீர்ப்பு கொடுத்துட்டாங்க. முஸ்லிம்கட்சின்னு சொல்லிகிட்டு முஸ்லிம்கிற அடையாளத்தையே அழிசிகிட்டு திறியிர கூட்டம் தான் இவங்க. எங்கேயோ கேரளாவில ஒரு உள்ளாட்சி தொகுதியில போட்டி போட்டு ஜெயிச்சி இவங்க பன்னுன அளப்பரைய மறக்கவே முடியாது. வாக்கு சதவிகிதத்த எப்படி பார்ர்கனும்னு கூட தெரியாம திமுக கூட்டணில போட்டி போட்ட முஸ்லிம் கட்சியோட வாக்கு சதவிதத்த சுட்டிக்காட்டி, கூட்டணியில போட்டி போட்ட நீங்க வெறும் 0.5% தான் ஆனா நாங்க தனிச்சி போட்டி போட்டு 0.2% சதவிகிதம்னு சொல்லிகிட்டு அழையிராங்க.

இதெல்லாம் பார்த்தா சிரிப்பு தான் வருது.

அடுத்து ஒரு கட்சி நாங்க மட்டும் தான் முஸ்லிம் சமுதாயத்தோட உண்மையான அரசியல் சக்தின்னு சொல்லிட்டு அலைராங்க. போன தேர்தல்ல அம்மாவை முதல்வராக்குவோம்னு கூவிகிட்டு வேல செஞ்சாங்க. அவங்க கனவும் நினைவானுச்சி. ஏதோ அந்த அம்மா தயவுல ரெண்டு தொகுதியும் கிடச்சிது. இந்த தேர்தல்ல அதே அம்மாவோட கூட்டணிக்கு அழையோ அழைன்னு அழஞ்சி கால் கடுப்பு வந்தது தான் மிச்சம். அந்தம்மா பாவப்பட்டு கூட ஒரு பார்வ பார்கல. அதுக்கு காரணம் யாரு? போன தேர்தல்ல அம்மா தயவுல ரெண்டு தொகுதியில ஜெயிச்சி மாநிலங்களவை தேர்தல்ல திமுகவுக்கு வாக்களிச்சது தான். சீச்சீ இந்த பழம் புளிக்கும்கிற கதைல ரெண்டு நாள் முண்ணாடி வரையும் அம்மாவின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலர வேண்டும் என பேசிய தல, அடிசிது பாரு ஒரு பல்டி. அதுக்கு பேரு தான் அந்தர் பல்டியாம். உடனே தொண்டர் படையும் சேர்ந்து அடிச்சிது ஒரு பல்டி. முதல் நாள் வரை திமுகவை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கழுவி ஊத்திய தொண்டர் படை கேள்விகணக்கில்லாம தலமை சொல்லிட்டா எல்லாம் சரிதான்னு தன் இயல்பையே மாத்தி பேசுது. ஒருசிலர் எல்லை தாண்டி கூட போனாங்க.

பெண்ணை ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைக்கும் சமூகம் உருப்படாதுன்னு நபி (ஸல்) அவர்கள் சொன்னத மேற்கோள் காட்டி பேசுராங்க. என்னக் கொடும சார்… போன தேர்தல்ல அந்த பெண்ண தானே ஆட்சி கட்டில்ல உட்கார வட்சி அழகு பார்த்தீங்க… இவங்கள பார்த்து நா ஒன்னு கேட்குறேன்… மாற்று அரசியல் மாற்று அரசியல்னு சொல்லிட்டு திரிஞ்சீங்களே அப்படின்னா என்னா? அதிமுக, திமுகவுக்கு மாற்றா? இல்ல அதிமுக, திமுகவ மாற்றி மாற்றி ஆதரிக்கிறதா? இவங்களுக்கு சமுதாயத்து மேல உண்மையான அக்கரை இருக்குதா? இருந்திருந்தா தேர்தல் நேரத்துல முஸ்லிம்கட்சிகளை ஒருங்கிணைத்து ஓரணியா போட்டி போடலாம்னு முயர்ச்சி செஞ்சாரே தடா அப்துர்ரஹீம். அந்த கூட்டத்துக்கு வரோம்னு சொன்னீங்களே. போய் இருந்திருக்கனும் ஆனா ஒருபய போகல. போயிருந்தா இந்த சமுதாயம் நம்பியிருக்கும். அட உடன்பாடு இல்லன்னாலும் ஒரு மரியாதைக்காகவாவது போய் இருந்திருக்கலாமே. அழைப்பு கொடுத்தது ஒரு முஸ்லிம் தானே. அதே நபர் உங்கள தன் வீட்டு திருமணத்துக்கு சிறப்பு விருந்தினரா கூப்பிட்டு இருந்தா போகாம இருந்திருப்பீங்க?

அடுத்து ஒரு கட்சியோட தல, ஒண்ணு மண்ணா இருக்கும் போது வாய்கிழிய சொந்த சின்னம் நொந்த சின்னம்னு பேசிகிட்டு அழைஞ்சிது. ஒட்டு உறவு இல்லன்னு தனியா கட்சிய ஆரம்பிச்சிகிட்டு வந்துடுச்சி. சரி உறவுல தான் விரிசல் கொள்கைல இருக்காதுன்னு நினச்சோம். ஆனா சொந்த சின்னமா? நொந்த சின்னமா? ன்னு பட்டி மன்றம் நடத்தாத குறையா பேசி அடகு சின்னத்துல நின்னு வெற்றியும் பெற்றாச்சி. கேட்குரவன் கேனையன இருந்தா, கேப்பைல நெய் வடிதுன்னு சொல்வானாம்.

யார முட்டாளாக்குறாங்க?? இனி தான் இவங்களோட திறமை என்னான்னு தெரியும். சமுதாயத்துக்காக ஏதாவது செய்வாங்களா இல்ல அம்மா புகழ் பாடியே 5 வருசத்த கடத்துவாங்களான்னு. அந்த அம்மா இவரை எல்லாம் மதிச்சி முஸ்லிம் சமுதாயத்தோட எந்த கோரிக்கையையும் ஏற்காதுன்னு ஒருசில அரசியல் நோக்கர்கள் சொல்றாங்க. பொருத்திருந்து பார்ப்போம். என்ன நடக்குதுன்னு…

அடுத்து ஒரு கட்சி சுதந்திர இந்தியாவுக்கு முன்னாடிலேர்ந்து அரசியல் நடத்துது. ஆனா கழுத தேஞ்சி கட்டெறும்பா போன கதையா கட்சி லீக்காகி இப்போ வீக்காகி போய் கிடக்குது. அதுக்கு காரணம், இவங்களும் சமுதாயத்தோட உள்ளக்குமுறல புரியாம திமுகவோட சிறுபாண்மை பிரிவாக போனது தான்.

இனியும் இவங்களையெல்லாம் நம்பிக்கிட்டு இருந்தா நாம நாசமா போக போரது உறுதி. இஸ்லாமிய கட்சிகளை ஒட்டுமொத்தமா புறக்கணிக்கணும். இவர்கள புறக்கணிக்கிறது மட்டும் நம்ம வேல இல்ல. பாஸிஸத்துக்கு எதிரான சக்தியோடு கை கோர்க்கனும். நம்மோட உண்மையான வலிமய நிலை நாட்டணும். இது தான் நடுநிலையான முஸ்லிம்களோட கனவு. இவங்க பண்ணுர அரசியல பார்த்தா போங்கடா நீங்களும் உங்க அரசியலும்னு சொல்ல தோனுது…

ஏதோ என் மனசுல பட்டத சொல்லிப்புட்டேன்…
இதுக்கு பதில் கொடுக்குரேன்னு ஒரு கூட்டம் வரலாம்… வந்தாலும் ஒத்துமையா எல்லா கட்சிகாரங்களும் சேர்ந்து வருவாங்களா? அது தான் நடக்காது? அவங்கவங்க கட்சி பத்தி மட்டும் வாய் கிழிய பேசுவாங்க…

அன்பு டன்
முத்துப்பேட்டை அலீம்

About வலையுகம் அலீம்

Check Also

ஈதுல் ஃபித்ர்- நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

கண்ணியமிக்க மாதமான ரமலான் இவ்வாண்டு நமக்கு பல படிப்பினைகளை கற்றுக் கொடுத்துள்ளது. இவை எல்லாம் அல்லாஹ்வின் சோதனைகளில் ஒன்று என்ற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *