ரமலானே வருக… பெருவாழ்வு தருக…

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த நாளான லைலத்துல் கத்ர் இரவை தன்னகத்தே கொண்ட சாந்தி மற்றும் அமைதியை கொண்ட சன்மார்க்கத்தின் புனித மாதம் ரமலான் இதோ நம்மை நெருங்கும் தருணம்…

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மரண அடி வாங்கி எழ முடியாமல் துவழும் என் சமுதாய சொந்தங்களே…

அரசியல் களத்தை அலங்கரிக்க நீங்கள் எடுத்துக்கொண்ட உழைப்பை, உலக வெற்றிக்காக நீங்கள் உழைத்த உழைப்பை நம் சத்திய சன்மார்க்கத்தை அலங்கரிக்க, மறுமை வெற்றியின் மூலம் சுவனத்தை அலங்கரிக்க அல்லாஹ் வழங்கிய ஆறுதல் (ரமலான்) இதோ நம்மை மிக வேகமாய் நெறுங்குகின்றது.

எப்பேர்பட்ட கல் நெஞ்சனையும் தொழவைக்கும் மாதம், கொடை கொடுக்க பயப்படும் கஞ்சனையும் வாரி வழங்கச் செய்யும் மாதம், வருடம் முழுதும் யாருக்கும் பயப்படாதவனையும் ஏகனைக் கொண்டு சற்றே பயமுறுத்தும் மாதம், அன்பையும், பாசத்தையும் அள்ளி அள்ளி பொழியும் மாதம், பொய்யையும், பொறாமையையும் நீக்கும் மாதம் இப்படி மிகப்பெரும் சிறப்பான ரமலான் நம்மை நெருங்கி வருகின்றது…

எதிவரும் புனித ரமலானை நம்மால் அடைய முடியுமா? அதுவரை இவ்வுலகத்தில் அல்லாஹ் நமக்கு வாய்ப்பளிப்பானா? யாருக்கும் தெரியாது… எவராலும் உறுதியாக சொல்லவும் முடியாது. இப்படிப்பட்ட ஒரு அர்ப்ப வாழ்வு தான் இந்த உலக வாழ்வு.  அதில் கிடைக்கும் மகத்தான அருட்கொடையான ரமலானில், நன்மைகளை அறுவடை செய்ய அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் நமது குடும்பத்தார்களுக்கும் அருள் செய்வானாக.

اِعْلَمُوْۤا اَنَّمَا الْحَيٰوةُ الدُّنْيَا لَعِبٌ وَّلَهْوٌ وَّزِيْنَةٌ وَّتَفَاخُرٌ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِى الْاَمْوَالِ وَالْاَوْلَادِ‌ كَمَثَلِ غَيْثٍ اَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهٗ ثُمَّ يَهِيْجُ فَتَرٰٮهُ مُصْفَرًّا ثُمَّ يَكُوْنُ حُطٰمًا‌ وَفِى الْاٰخِرَةِ عَذَابٌ شَدِيْدٌ ۙ وَّمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرِضْوَانٌ‌ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ‏
அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையன வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு – ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை.
(அல்குர்ஆன் : 57:20)

அன்பு டன்
முத்துப்பேட்டை அலீம்

About வலையுகம் அலீம்

Check Also

தர்மம் தலைகாக்குமா? தக்க சமயத்தில் உயிர்காக்குமா?

தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்ற பழமொழிக்கேற்ப இஸ்லாமிய சமூகம் இந்நாட்டில் எங்கு அசம்பாவிதங்கள் நடந்தாலும் இயற்கை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *