தமிழக தேர்தலும் தன்மானமில்லா மக்களும்…

என் வாக்கு, என் உரிமை, நான் விற்பேன் என்கிற ரீதியில் வாக்கை வித்து வாயில் போட்டுகிட்டு நிக்கிது தமிழ்நாடு…
காச வாங்கிட்டு ஓட்ட போட்ட… ஓட்ட வாங்கிட்டு 5 வருசம் உன் வாயில் மண்ண அள்ளித்தான் போடுவானுங்க…
சூடும் இல்ல சொரணையும் இல்ல…
எவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன… யாரு தாளி அறுந்தா எனக்கென்ன என்கிற போக்கு நல்லதுக்கில்ல…
காசு கொடுத்தா ஓட்டு போடுவோம் என்றால் இன்னும் கொஞ்ச காலத்துல உன் வீட்டு பொம்பளைங்களையும் கேட்பான்…
காச வாங்கிட்டு அனுப்பி வைப்பீங்க போல…
தலைவன் சரி இல்ல… தலைவன் சரி இல்லனு அரசியல் வாதிகள குறை சொல்லுற நீ சரியா இருந்தா அவன் உனக்கு பயப்படுவான்…
நீ அவனுக்கு எச்சியா இருக்க… உன்ன அவன் துச்சமா நினைக்கிறான்…
மக்களுக்கு சேவை செய்ய மக்களுக்கே லஞ்சம் கொடுக்குரானே…. ஏன் எதுக்குன்னு கொஞ்சமும் யோசிக்க மாட்டீங்களா?
அவன் உனக்கு சேவை செய்ய வரல… உன் பேர சொல்லி தன் குடும்பத்துக்கு சொத்து சேர்க்கத்தான் வரான்…
இதெல்லாம் உனக்கு புரியாதா என்ன…??
புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்கிறியே…
உன்ன நினச்சி கவலப்படுரதா?? இல்ல சிரிக்கிறதான்னு தான் தெரியல…
நம்ம நாட்டுல இருக்குறத போல நம் தலைவன நாமே தேர்ந்தெடுக்குர சட்டம் இல்லாத நாட்டுக்காரனுக்கு தான் தெரியும். தேர்தல் அரசியலின் அருமை…
நிலலின் அருமை வெயிலில் தான் தெரியும்னு சொல்லுவாங்க…
இன்னும் கொஞ்ச காலத்துல திமுக அதிமுக தமிழ் நாட்ட அம்மா நாடு கலைஞர் நாடுன்னு இரண்டா பிறிச்சி உங்கள அடிமைகளா வச்சி ஆளுவாங்க….
அப்போ தெரியும்…. எத்தனை வாய்ப்புகள் கிடைச்சது…. விட்டோமே…. இப்போ சீரழிந்து நிக்கிறோமேன்னு….
தமிழா… மானமுள்ள மூத்த குடின்னு பேசுரதுல இல்ல பெரும…
மானத்தோட  வாழ்வதுல தான் இருக்கு…
அரசியல்வாதி எவனாவது ஏழை இருக்கானா?
ஆனா மூச்சிக்கு முன்னூறு தடவ ஏழைகளின் கட்சி ஏழைகளின் ஆட்சின்னு சொல்லி… உனக்கு அரசாங்கம் கொடுக்குர சலுகைகள் எல்லாத்தையும் அவன் குடும்பத்துக்கு கொண்டுபோய் சேர்த்து வைப்பான்…
நீ அடுத்த வேல கஞ்சிக்கி யோசிக்கிற… உன் பேர சொல்லி ஆட்சி செய்யும் அரசியல்வாதி, தனக்கு பின்னாடி வரப்போர தன்னோட 10 தலைமுறை சந்ததி நல்லா சொகுசா வாழ உன்ன சுரண்டி சேர்க்கிறான்…
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே….
இந்த பாட்ட கேட்டுகிட்டு சும்மா இருந்தா மட்டும் போதாது… ஏமாற்றுபவனை ஓட ஓட விரட்டி அடிச்சா தான் நாம உருப்படுவோம், நம் சந்ததிகள் உருப்படும்…
நீ தான் நாசமா போயிட்ட… உன் சந்ததியாவது நல்லா இருக்கட்டுமே…
அடிமைகளாய் வாழ்ந்து அடிமைகளாய்  மரணிப்பதை விட இந் நாட்டின் மண்ணின் மைந்தர்களாய் வாழ்வோம்…
அரசியல் சாத்தான்களை அடியோடு ஒழிப்போம்…
அன்புடன்
மானமுள்ள தமிழன்
முத்துப்பேட்டை அலீம்

About வலையுகம் அலீம்

Check Also

என்னங்க சார் உங்க சட்டம்

1. கொரோனா வைரஸ் உலகெங்கும் கடுமையாக பரவி வந்த நிலையில் எவ்வித முன்னேற்பாடும் செய்யாமல் நமக்கென்ன போக்கோடு செயல்பட்ட அரசு, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *