கோமாளியின் கோர முகம்

இந்தியா 1947ல் சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகால வரலாற்றில் பல்வேறு பிரதமர்களை கண்டுள்ளது. ஒவ்வொறுவருக்கும் ஒவ்வொரு சிறப்பு பண்புகள் உண்டு. அதனடிப்படையில் அவர்கள் பிரதமர்களாக ஆனார்கள். ஆனால் 2014 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக வலம் வரும் மோடியின் சிறப்பு பண்பு சற்றே வித்தியாசமானது.
எந்த ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கவும் அவர்களின் நற்பண்புகள் கவனிக்கப்படும். அவரின் கடந்த கால வாழ்வில், அவரின் சாதனைகள் அடையாளம் காணப்படும். தகுதியானவரா என ஆராயப்படும். ஆனால் மோடி விசயத்தில் மக்கள் மிகப்பெரும் தவறை இழைத்து விட்டார்கள். காங்கிரசின் மீது இருந்த கோபத்தில் என்ன செய்கின்றோம் என்பதை அறியாமல் முடிவெடுத்துவிட்டனர். கோபத்தில் எடுக்கும் எந்த முடிவும் தவராகத்தான் ஆகும் என்பதற்கு 2014 பாராளு மன்ற தேர்தல் ஒரு எடுத்துக்காட்டு.
கடந்தகால வாழ்வில் மோடி எப்படிப்பட்டவர் என்பது யாருக்கும் தெரியாமல் இல்லை. ஆனால் வளர்ச்சி என்ற ஒற்றை வார்த்தையை நம்பி ஒட்டுமொத்த இந்திய சமூகமும் ஏமாந்து நிற்கின்றது என்பதே உண்மை. எவனை கொண்றால் நமக்கென்ன என்ற அகங்கார தோரனையில் வாக்களித்த மக்கள் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் ஒரு அவல நிலை ஏற்பட்டு விட்டது. தினம் ஒரு தகவல் என்பது போல தினம் ஒரு சர்ச்சை, கேலி, என்று இந்தியாவின் மானம் விமானம் ஏறுகின்ற காட்சி ஏமாற்றத்தை, ஒவ்வொறு இந்தியனுக்கும் உணர்த்துகின்றது.
கடந்த ஆட்சியில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அவர்களை ஊமை பிரதமர் என்று சொன்ன மக்கள், மோடியின் செயலை கண்டு ஊமையாகிப்போன பரிதாபம். இவர் நாட்டுக்கு பிரதமரா? இல்லை மாட்டுக்கு பிரதமரா என்று கேட்கும் நிலையில் தான் ஆட்சி அமைந்துள்ளது.
ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்பட்ட மோடி பலூன் இப்போது வெடித்து சிதறிவிட்டது… சீனாவை காட்டி எனது மானிலம் என்று பித்தலாட்டம் செய்தும், பாக்கிஸ்தானை எதிர் கொள்ள தகுதியானவர் என்று தம்பட்டம் அடித்தும், கருப்பு பணத்தை ஆட்சி ஏறிய உடன் மீட்டு மக்களுக்கே தலா 15 இலட்சம் கொடுத்து விடுவேன் என்று பீலா விட்டும், நாட்டை வளர்ச்சியின் பாதையில் கொண்டு சொல்ல மோடியால் மட்டுமே முடியும் என்று போலி பிம்பத்தை உருவாக்கியும் ஆட்சியை பிடித்தார் மோடி. ஆனால் சொன்ன எதுவும் நடக்கவில்லை மாறாக நாடு கற்காலத்தை நோக்கி படு வேகமாக பயணித்துக்கொண்டுள்ளது.
காங்கிரஸின் ஆட்சியை கழுவி ஊற்றிய பார்ப்பன அடிமை ஊடகங்கள் மோடியின் ஆட்சியின் அவலங்களை சொல்லாவிட்டாலும் பரவாயில்லை மாறாக பொருளாதார வளர்ச்சியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடமாம். கேட்பவன் கேனையன் என்றால் கேப்பையிலும் நெய் வடியும் என்பதை போல அளந்து விடுகின்ற வேலையை கேடுகெட்ட ஊடகங்கள் செய்து வருகின்றன.
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின் பணத்தின் மதிப்பு அதிகரிக்க வேண்டும். கடந்த ஆட்சியை விட மோடியின் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி உண்மை என்றால் பிறகெப்படி நாட்டின் பணத்தின் மதிப்பு அதல பாதாளத்தில் குற்றுயிரும் கொலை உயிருமாய் கிடக்கிறது. இதற்கு வெளிநாடுகளில் பணியாற்றும் ஒவ்வொரு இந்தியனும் சாட்சியாக இருக்கின்றான்.
கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று சொல்வார்கள் ஆனால் நம் நாட்டின் பிரதமர் எங்கு சென்றாலும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி அசிங்கப்படுவதும், நாட்டை கேவலப்படுத்துவதுமாக நடந்து கொள்வது பெரும் கேலிக்கூத்தாக இல்லையா?
தேசியக்கொடி தலைகீழாக இருப்பது கண்ணுக்கு தெரியவில்லை, இசைக்கப்படுவது நமது நாட்டின் தேசிய கீதம் என்பது தெரியவில்லை, உலகமே நம்மை உற்று நோக்குகிறது என்பதும் தெரியவில்லை, மாறாக அவர் கண்ணுக்கு தெரிவதெல்லாம் கேமரா… கேமரா… கேமரா மட்டுமே…
இந்த தருணத்தில் தமிழ் பேராசிரியர் ஹாஜாகனியின் வரிகள் தான் நினைவில் வருகின்றது…
”ஆடுவோமே பல்லு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமே” என்று பாடிய பாரதி இன்று இருந்தால் அந்தோ நாறுதே சுதந்திரம் ஐயோ இதற்கா வாங்கினோம் என்று பாடி இருப்பார்.
தன்வினை தன்னை சுடும் என்பது போல நாம் செய்த தவறு நம்மை தலைகுனிய வைத்துள்ளது. சிந்தித்து வாக்களித்திருந்தால் சிறப்பாக வாழ்ந்திருப்போம்.
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்

About வலையுகம் அலீம்

Check Also

ஈதுல் ஃபித்ர்- நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

கண்ணியமிக்க மாதமான ரமலான் இவ்வாண்டு நமக்கு பல படிப்பினைகளை கற்றுக் கொடுத்துள்ளது. இவை எல்லாம் அல்லாஹ்வின் சோதனைகளில் ஒன்று என்ற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *