பாஜகவின் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல்

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்று உலகு போற்றும் உன்னதமான நாடு நமது தாய்த் திருநாடு. உலகின் எந்த நாட்டிலும் இல்லாத ஒரு சமூக கட்டமைப்பு இந்தியச் சமூகத்தின் கட்டமைப்பு மட்டுமே. இதனை தகர்த்தெரியும் நோக்கத்தோடு இந்தியாவில் செயல்படும் பாசிச ஆர்.எஸ்.எஸ் தனது சித்தாந்தத்தை மக்கள் மீது திணித்து பிளவுபடுத்தி ஆள திட்டம் தீட்டி சதி வேலையில் இறங்கி செயலாற்றி வருகின்றது. ஆர்.எஸ்.எஸ் ஸின் இந்த பார்பனியம் என்பது புதிதான ஒன்றல்ல. மாறாக யூத கலாச்சாரத்தை சார்ந்ததே.

பொதுவாகவே யூதர்கள் பற்றிய வரலாற்றை நாம் ஆராய்ந்து பார்த்தால் வரலாறு நெடுகிலும் மாபெரும் கோழைகளாகவே இருந்த்திருக்கின்றனர். ஃபிர் அவுனுக்கு எதிராக போராட  மூஸா நபி அழைத்த போதும் சரி, அவன் அழிவுக்கு பின்னாலும் சரி, நீயும் உன் இறைவனும் சேர்ந்து போராடுங்கள் எங்களால் முடியாது என்று சொன்னவர்கள் தான் இவர்கள்.

இவர்கள் தாங்களாக போராட மாட்டார்கள். அடுத்தவர்களை போராடவிட்டு வெற்றியை மட்டும் தனதாக்கிக் கொள்ளக்கூடியவர்கள். இந்த வம்சாவழியில் வந்த ஆரிய பார்ப்பனர்களின் தந்திரமும் இதுவே. இவர்கள் எங்கெல்லாம் செல்கின்றார்களோ அங்கிருக்கும் சமூகத்தை ஏவி விட்டு அவர்களை பலிகடாவாக்கி அவ்விடத்தை தனதாக்கிக் கொள்வதையே வழக்கமாக கொண்டவர்கள்.

இன்னும் அவ்விடத்தில் வாழும் பூர்வகுடிகளையும் தங்களது அடிமைகளாகவும் ஆக்கி விடுவார்கள். அப்படி கைபர் போலன் கணவாய் வழியாக இந்திய தேசம் வந்த வந்தேரி பார்ப்பனர்கள் இந்தியர்களையும் தங்கள் அடிமைகளாக ஆக்கி, அவர்களின் ஏற்றத்தாழ்வு கொள்கையில் இணைத்து இன்று ஆளக்கூடிய நிலையும் வந்துவிட்டது.

இவர்கள் ஒட்டுமொத்த இந்திய சமூகத்தையும் தங்களது ஏற்றத்தாழ்வு கொள்கையில் பிணைத்தாலும் அவர்களின் சூழ்ச்சியில் சிக்காத சமூகங்களை அழித்தொழிக்கவும் தயங்க மாட்டார்கள்

இந்தியாவில் வாழும் இந்துக்களாகட்டும் கிறிஸ்தவர்களாகட்டும் மற்றும் இன்ன பிற மதங்களை சார்ந்தவர்களாகட்டும் அனைவருமே ஏதோ ஒரு வகையில் பார்ப்பனியத்தின் ஏற்றத்தாழ்வு கொள்கையில் சிக்கி உழன்று வருகின்றனர்.  இதில் சிக்காத ஒரே சமூகம் இஸ்லாமிய சமூகம் மட்டும்தான். அந்த ஒற்றை விஷயம்தான் இந்தப் பார்ப்பன பனியா கும்பலை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பியுள்ளது.

நாமும் பார்ப்பனியத்தின் ஏற்றத்தாழ்வு கொள்கையை ஏற்றுக்கொண்டு தலித் முஸ்லிம், கீழ்ஜாதி முஸ்லிம், இடைச்சாதி முஸ்லிம் என்று பிரிந்து கிடந்திருந்தால் நிச்சயம் இவர்கள் நம்மை ஏறெடுத்தும் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் நாம், சாதி, மத, இன வேற்றுமை பாராமல் இருப்பது மற்ற சமூக மக்களை தன்பால் இஸ்லாம் இழுத்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியதின் விளைவே முஸ்லிம் எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்ததர்க்கு காரணமாகும்.

அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.
அல்குர்ஆன் : 61:08

அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்

About வலையுகம் அலீம்

Check Also

ஈதுல் ஃபித்ர்- நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

கண்ணியமிக்க மாதமான ரமலான் இவ்வாண்டு நமக்கு பல படிப்பினைகளை கற்றுக் கொடுத்துள்ளது. இவை எல்லாம் அல்லாஹ்வின் சோதனைகளில் ஒன்று என்ற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *