Fearless Heart – அஞ்சி ஓடாத நெஞ்சம்
உயிர் பிரியும் நேரத்திலும்
இறை கயிர் அறுந்திடுமோ..?
குறுதி வழிந்தோடும் நேரத்திலும்
எங்கள் உறுதி கறைந்தோடுமோ..?
வாள்கள் ஏந்திய காவிகள் கண்டு
எம் கால்கள் பயந்தோடுமோ..?
கள்ளம் கொண்ட அரசினை கண்டு
எம் உள்ளம் பதரிடுமோ..?
சத்தியம் வெல்ல சந்ததி சொல்ல
சபதம் ஏற்றிடுவோம்!
சக்கரம் போலே சுழல்வதி னாலே
சமூகம் காத்திடுவோம்!
கண்மணி நபியின் சொல்லினை ஏற்று
கண்ணியம் போற்றிடுவோம்!
தன்னம்பிக்கை கொண்டவனாக
தலைகள் நிமிர்ந்திடுவோம்!
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்