கவிதை

புதிய இந்தியா பிறந்து விட்டது

ஆளும் இல்லை அரவமும் இல்லை… ஏனென்று கேட்க ஒரு நாதியும் இல்லை… நோயும் இல்லை நொடியும் இல்லை… ஆனால் உயிர் வாழ வழியும் இல்லை… சோறும் இல்லை பாலும் இல்லை… சோதனைக்கும் பஞ்சமில்லை… காயும் இல்லை கரியும் இல்லை… கால் வயிறும் நிரம்ப வில்லை… அமைதியும் இல்லை தூக்கமும் இல்லை… நாளை பொழுதை நினக்க முடியவில்லை… ஆனால்…. பசியும் இல்லை பஞ்சமும் இல்லை… பால் பக்கெட் போட குறைவும் இல்லை… …

Read More »

மவுனமாய் இருக்கலாமே…

நாடே தூற்றியது… நாவடக்கம் மீறியது… நோயின் பெயராலே… நோவினை செய்தது… நரிகளின் ஊளையில்… நானிலமே மாறியது… நாடி நரம்புகள் தளர்ந்தது… நம்பிக்கைகள் தகர்ந்தது… காவியின் சூழ்ச்சிக்கு… காலமும் கனிந்தது… காணாத காட்சிகளெல்லாம்… கண்களும் கண்டது… வீணாக உதவி செய்து… வீண் பழி சுமக்காமல் விழிப்புடன் வீற்றிருப்போம்… வீட்டிலேயே காத்திருப்போம்… மதத் துவேஷம் மூண்டது… மனிதாபிமானம் மாண்டது… மருந்து இல்லா நிலையிலும்… மரணமென்ற வலியிலும்… மனம் நோக வாழ்வதை விட மவுனமாய் இருக்கலாமே… …

Read More »

அழகாய் ஆண்ட கூட்டம்

ஊடகத்தின் உன்னதத்தை ஊத்தி மூடியாச்சு… ஓநாய்களின் உளரலுக்கு ஒத்து ஊதியாச்சு… மோடி போன்ற கேடிகளை வாழ்த்தி வணங்கியாச்சு… தாடி வைத்த முஸ்லிம்களை தேடி புடிச்சாச்சு… தொப்பி போட்ட முஸ்லிம்களை தீவிரவாதியாக்கியாச்சு… தொப்பை உள்ள காவல் துறை காவித்துறையாச்சு… கருணாவின் துரோகத்தை தாங்கி பிடிச்சாச்சு… கண்டவனையும் நம்பி நம்பி மோசம் போயாச்சு… வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி தொலச்சாச்சு… ஒழுக்கங்கெட்ட காவிகளின் வலையில் விழுந்தாச்சு… குட்ட குட்ட குணிந்த காலம் மலையேரிப் …

Read More »

எப்போது புரியும் உமக்கு

சத்தியத்தை கண்டும் காணாமல் போகிறாய்… அசத்தியத்தை காணத் தேடி அழைகிறாய்…மெய் மறந்து வாழும் மானிடனே… எப்போது புரியும் உமக்கு… சாத்தியத்தை கண்டும் அலட்சியமாய் பார்க்கிறாய்… அசாத்திய இருளில் மூழ்கி இறக்கவே விரும்புகிறாய்… மெய் மறந்து வாழும் மானிடனே… எப்போது புரியும் உமக்கு… படைத்தவனை விடுத்து கிடைத்தவனை வணங்குகிறாய்… மடைதிரந்த வெள்ளமாம் மானுட வசந்தத்தை ஏற்க மறுக்கிறாய்… மெய் மறந்து வாழும் மானிடனே… எப்போது புரியும் உமக்கு… அற்ப்ப வாழ்க்கையை ஆசையோடு …

Read More »

ஒளவியம் இல்லா ஒளரதன்

அச்சம் இல்லா ஆதவனாக அணிதிரள்வோம் ஆணவம் இல்லா புனிதர்களாய் நாம் அணிதிரள்வோம் இரக்கம் இல்லா மனிதர்களுக்கு எதிராய் அணிதிரள்வோம் ஈடு இல்லா இறை துணையோடு நாம் அணிதிரள்வோம் உரக்கம் இல்லா விழிகளோடு நாம் அணிதிரள்வோம் ஊழல் இல்லா உலகை படைக்க நாம் அணிதிரள்வோம் எதிரிகள் இல்லா சமூகம் உருவாக நாம் அணிதிரள்வோம் ஏக்கம் இல்லா சமுதாயம் படைக்க அணிதிரள்வோம் ஐயம் இல்லா வையம் படைக்க அணிதிரள்வோம் ஒழுக்கம் இல்லா மனிதர்களை …

Read More »

வஞ்சிக்கப்படும் என் சமுதாயம்

வஞ்சிக்கப்படும் என் சமுதாயம்-அதனால் கெஞ்சி நிற்குதடா தெருவோரம்… கஞ்சிக்கு வழியில்லையடா தினந்தோரும்-அதனால் அஞ்சி ஓடுதடா தொலைதூரம்… வெஞ்சிறையில் வாழும் அநியாயம்-அதிலும் கொஞ்சம் கூட இல்லையடா பரிதாபம்… கொஞ்சி பேசாத ஆதங்கம்-அதனால் பிஞ்சி மனங்களில் விபரீதம்… நஞ்சி கொடுக்குதடா அரசாங்கம்-அதனால் விஞ்சி நிர்க்குதடா மதச்சாயம்… அன்புடன் முத்துப்பேட்டை அலீம்

Read More »

புறப்படு தோழா… புறப்படு…

இன்னும் தூக்கம் எதற்கு தோழா புறப்படு… துக்கம் தொலைக்க தூக்கம் தொலைத்து புறப்படு… ஜனநாயகம் காக்க இளம் நாயகனே நீ புறப்படு… மதவாதம் போக்க பிடிவாதத்தோடு நீ புறப்படு… சாதியை ஒழித்த சாதனையாளனே நீ புறப்படு… நெஞ்சில் சுமக்கும் நீதியோடு நீ புறப்படு… வஞ்சம் சுமக்கும் அனீதிக்கெதிராய் நீ புறப்படு… ஊடக தீவிரவாதத்தை தீர்த்துக்கட்ட நீ புறப்படு… அசுத்த அரசியலை சுத்தமாக்க நீ புறப்படு… தாழ்ந்தவனல்லவே தோழா நீ புறப்படு… …

Read More »

எப்படி இருந்த சமுதாயம் இப்படியாச்சி

அன்று சாவை சுகமாய் கருதிய சமுதாயம்… இன்று வாழ்வை வளமாய் தேடுது பரிதாபம்… அன்று சுவனத்தை சுவைக்கத்தான் விரும்பியது சமுதாயம்… இன்று செல்வ சுகத்துக்காய் அழைகிறது பரிதாபம்… அன்று சமூக தீமைகளை சத்தியத்தால் சாய்த்த சமுதாயம்… இன்று பன்முக தீவினையின் அசத்தியத்தால் சாய்ந்த பரிதாபம்… அன்று பக்கத்து வீட்டான் பசியை போக்கிய சமுதாயம்… இன்று பக்கத்திலிருப்பவனை கூட பாராத பரிதாபம்… அன்று மதுவை மண்ணில் கொட்டிய சமுதாயம்… இன்று மதுவால் மண்ணில் …

Read More »

இனி மேயும் வேளியே பயிர்களை

செல்வ செழிப்புள்ள நாட்டினிலே செம்மண்ணாக மாற்றிடவே செருக்குடன் வருதே ரோட்டினிலே அட்டைப் பூச்சிகள் ஆட்சிக் கட்டிலிலே விட்டில் பூச்சிகள் எரியும் தீச்சட்டியிலே தெளிவான பாதைகளை தொலைத்துவிட்டு இழிவான பாதைகளை தேர்ந்தெடுத்தோம் வெளிச்சம் என்று நம்பி போனால் அச்சம் ஒன்றே மிச்சமானது திராவிடமும் தோற்றது தமிழனும் தோற்றான் இனி மேயும் வேளியே பயிர்களை அன்புடன் முத்துப்பேட்டை அலீம்

Read More »

அஞ்சி ஓடாத நெஞ்சம்

உயிர் பிரியும் நேரத்திலும் இறை கயிர் அறுந்திடுமோ..? குறுதி வழிந்தோடும் நேரத்திலும் எங்கள் உறுதி கறைந்தோடுமோ..? வாள்கள் ஏந்திய காவிகள் கண்டு எம் கால்கள் பயந்தோடுமோ..? கள்ளம் கொண்ட அரசினை கண்டு எம் உள்ளம் பதரிடுமோ..? சத்தியம் வெல்ல சந்ததி சொல்ல சபதம் ஏற்றிடுவோம்! சக்கரம் போலே சுழல்வதி னாலே சமூகம் காத்திடுவோம்! கண்மணி நபியின் சொல்லினை ஏற்று கண்ணியம் போற்றிடுவோம்! தன்னம்பிக்கை கொண்டவனாக தலைகள் நிமிர்ந்திடுவோம்! அன்புடன் முத்துப்பேட்டை …

Read More »