Dream Land | முஸ்லிம்களின் கனவு தேசம்
பொருளடக்கம்
பொருளடக்கம்
முன்னுரை
இஸ்லாமியர்களின் கனவு தேசமாக கருதப்படும் மக்காஹ் சவூதி அரேபியாவின் புனித நகரமாகும். இது முஹம்மது நபியின் பிறந்த இடம் மற்றும் இஸ்லாத்தின் புனிதமான ஆலயமான மக்காஹ் மஸ்ஜித் காபாவின் தளமாகும்.
ஒவ்வொரு ஆண்டும், மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் ஹஜ் எனப்படும் மெக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.
சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரம் புதிய சாளரத்தில் திறக்கிறது.
முஸ்லிம்களின் கனவு தேசம் Dream Land
முஸ்லிம்களின் அதிக விருப்பத்திற்குறிய தேசம் எது என ஒரு கருத்துக் கேட்டால் முந்திக்கொண்டு முதலிடத்தை பிடிப்பது முஹம்மது நபி பிறந்த மண்ணாகத்தான் இருக்கும். ஏனென்றால் இது ஒவ்வொறு முஸ்லிம்களுக்கும் கனவு தேசம்.
முஸ்லிம்கள் தங்களது உயிருக்கும் மேலாக உலகில் நேசிக்கும் ஒரே மனிதரான முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்து, வளர்ந்து, ஆட்சி செய்த பூமி என்பதால் தான்.
மனிதர்களை மனிதர்களாக பார்க்கும் பூமி
முஸ்லிம்களின் கனவு தேசமான மக்கா அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் இடமாகும். உலகெங்கிலும் உள்ள மக்கள் ஒன்று கூடி அல்லாஹ்வை வழிபடவும் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும் கூடிய இடம் இது.
மக்கள் தங்கள் வேறுபாடுகளை விட்டுவிட்டு ஒரே உம்மாவாக அல்லது சமூகமாக ஒன்றிணையக்கூடிய இடமாகும்.
இஸ்லாமியர்களின் கனவு தேசமான மக்காவில் வறுமை இல்லை, பசி இல்லை, போர் இல்லை.
இனம், மதம், சமூக அந்தஸ்து எதுவாக இருந்தாலும் அனைவரும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்படுகிறார்கள். அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகல் உள்ளது.
சாதனையாளர் அஸ்ஸாதிக்
உலக வரலாற்றில் எந்தத் தலைவரும் சாதித்திராத இனியும் சாதிக்க முடியாத மாபெரும் சாதனைகளை சாதித்த சாதனையாளர் அஸ்ஸாதிக் என அன்போடு அழைக்கப்படும் அண்ணல் நபி.
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மீது கொண்ட மட்டற்ற அன்பின் வெளிப்பாடாய் அரபு தேசத்தை நேசிக்கும் முஸ்லிம்கள் அம்மண்ணில் கால் வைக்கும் போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் தெரியுமா?
ஆனந்தத்தின் உச்சம்
சொந்த மண்ணில் தனக்காக ஆண்டுகள் பல காத்திருக்கபோகும் தன் குடும்பத்தை எண்ணி சற்றே மனம் வருந்தினாலும் மன்னர் முஹம்மது அவர்களின் மண்ணில் கால் வைக்க தனக்கு கிடைத்த மதிப்பிட முடியா வாய்ப்பை எண்ணி மனம் புண்ணகை பூக்கும்.
உலகில் பிறந்த எத்தனை முஸ்லிம்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று எண்ணி மனம் குதூகளிக்கும்
அல்லாஹ்வின் முதல் அடியார் ஆதி பிதா ஆதம் தன் துணைவியாரை சந்தித்த மண்.
அல்லாஹ்வின் ஆதி மார்க்கம் நிலை திரும்பிய மண்.
அல்லாஹ்வின் ஆதி ஆலையம் நிலை பெற்ற மண்.
“ஆஹா… தனக்கு இப்படி ஒரு வாய்ப்பை வாரித்தந்த வல்லோனின் வல்லமையை எண்ணி மனம் ஆனந்த தாண்டவம் ஆடி மகிழும்.
இருக்கும் காலத்திற்குள் எத்தனை உம்ராக்களை முடிக்கலாம் என்று உள்மனம் கணக்குப் போடும். இந்த சந்தோசம், மகிழ்ச்சி, ஆனந்தம்,புண்ணகை எத்தனை நாள் நிலைத்திருக்கும் என்று வந்த யாருக்கும் புறிந்ததில்லை.
முஸ்லிம்களின் கனவு தேசம் கனவில் மட்டும் தான் கனவு தேசம் நிஜத்தில்?
- எப்படி வாழ வேண்டும்?
- எப்படி வாழக் கூடாது?
- எதை உண்ண வேண்டும்?
- எதை உண்ணக் கூடாது?
- எதை உடுத்த வேண்டும்?
- எதை உடுத்தக் கூடாது?
- எதை பேச வேண்டும்?
- எதை பேசக் கூடாது?
அண்டை வீட்டாரோடு அனுசரித்தல், சொந்தங்களை சார்ந்திருத்தல், ஏழைகளை அரவணைத்தல், அனாதைகளை ஆதரித்தல், நன்மைகளை ஏவுதல், தீமைகளை விட்டும் தடுத்தல் என அத்தனைக்கும் வழிகாட்டியாய் நபிகள் நாயகம் வாழ்ந்த மண்.
அவ் வழிகாட்டலை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்து வருகின்றது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் அது தான் உண்மை.
முஸ்லிம்களின் கனவு தேசம் Dream Land கனவாகிப்போகுமோ
ஆழிய அன்பும், கூரிய பண்பும், நேரிய வழியும் நோக்கமாய் கொண்ட, நோவினை கொள்ளா நாயகம் வாழ்ந்த முஸ்லிம்களின் கனவு தேசம், நல்லதொரு தேசம் – இன்று அன்பில்லா வாழ்க்கை, பண்பில்லா பழக்கம், நேரிய வழியில்லா நோக்கம், நோவினை கொண்ட உள்ளம் என தடுமாற்றத்தோடு பெரும் மாற்றத்தோடு பாதை மாறிய பயணத்தில் நரகம் நோக்கி நகரும் முஸ்லிம்களின் கனவு தேசம்.
அடிமைத்தனத்தை உடைத்தெறிந்த அண்ணல் நபி பிறந்த மண்ணில் அடிமைகளாகத்தான் நடத்துகிறார்கள் அன்னிய தேசத்து பணியாளர்களை.
அன்று நீரைக்கூட சிக்கனம் செய்ய சொன்னார்கள் நபிகள் நாயகம் இன்று செல்வத்தைக் கூட நீராய் இறைக்கிறார்கள் அரேபியர்கள்.
இசையை தடை செய்த மார்க்கத்தில் இசை இல்லா வாழ்க்கை இல்லை என்ற நிலை, அன்று இந்த சமூகத்தை எண்ணி கவலை கொண்ட நபி இன்று இருந்திருந்தால் கண்ணீர்விட்டு அழுதிருப்பார்கள்.
இது சுற்றுச்சூழல் நிலைத்தன்மையின் இடமாக இருக்கும், அங்கு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
முஸ்லீம்களின் கனவு தேசம் மக்கா என்பது பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்கள் வைத்திருக்கும் தொலைநோக்குப் பார்வையாகும்.
இது இன்னும் அடையக்கூடிய ஒரு பார்வை, ஆனால் அதற்கு அனைத்து முஸ்லிம்களிடமிருந்தும் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவைப்படும்.
எவ்வாறாயினும் நாம் ஒன்றிணைந்து செயற்பட்டால் முஸ்லிம்களின் கனவு தேசமான மக்காவை நனவாக்க முடியும். முஸ்லிம்களின் கனவு தேசம் Dream Land கனவில் மட்டும் தானா? மாற்றம் ஏற்படுமா? அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்
முந்தைய பதிவை படிக்க : நபி வழியில் நம் தொழுகை