பொருளடக்கம்
Modi Failed | 9 ஆண்டு மோடி அரசின் மோசடிகள்
படுதோல்வியை சந்தித்த பாஜக அரசு
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக நல்ல நாள் (”அச்சா தின்”) வரப்போவதை பற்றி 2013-14 தேர்தல் பிரச்சாரத்தில் அறிவிப்பு செய்தார் மோடி.
பாரதிய ஜனதா கட்சியையும் மோடியையும் நம்பிய மக்கள் எல்லாம் அந்த நல்ல நாள் (”அச்சா தின்”) நமக்கானது என்று எண்ணினர். ஆனால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னால் இப்போது தான் அந்த மக்களுக்கு புரிகிறது நல்ல நாள் (”அச்சா தின்”) வந்தது யாருக்கு என்று.
யாருக்கு வந்தது அந்த நல்ல நாள் (”அச்சா தின்”)
ஐந்தாயிரம் கோடிக்கு மேல் சொத்துக்களையும் பொருளாதாரத்தையும் குவித்த பாஜகவுக்கு வந்தது நல்ல நாள் (”அச்சா தின்”).
நாளொன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாய் கை நிறைய சம்பாதிக்க தொடங்கிய முதலாளிகளுக்கு வந்தது நல்ல நாள் (”அச்சா தின்”).
கொரோனாவின் பேரழிவிற்கு, மத்தியில் ஒரு வருடத்தில் 30 லட்சம் கோடி ரூபாய் சம்பாதித்த அந்த 142 பெரிய பணக்காரர்களுக்கு வந்தது நல்ல நாள் (”அச்சா தின்”).
5 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி மோசடி செய்த வங்கிக் கொள்ளையர்களான மெஹுல், நிரவ் மோடி, லலித் மோடி, விஜய் மல்லையா, சந்தேஷரா போன்றவர்களுக்கு வந்திருக்கிறது நல்ல நாள் (”அச்சா தின்”).
கொரோனா பெருந் தொற்று மற்றும் பண வீக்கத்துக்கு மத்தியில் லட்சக்கணக்கான கோடிகளை சம்பாதித்தவர்களுக்கும், கருப்புச் சந்தைக்காரர்களுக்கும் வந்தது அந்த நல்ல நாள் (”அச்சா தின்”).
நாட்டு மக்களுக்கு கிடைத்தது என்ன?
சமையல் எரிவாயு 1000 ஐ தாண்டியது, சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு 200 ஐ தாண்டியது, பெட்ரோல் டீசல் விலை 100 ஐ தாண்டியது.
விவசாயிகளுக்கு கிடைத்தது என்ன?
மூன்று கருப்பு சட்டங்கள், தற்கொலைகள் மற்றும் ஒரு நாளைக்கு 27 ரூபாய் வருமானம் மட்டுமே.
இளைஞர்களுக்கு கிடைத்தது என்ன?
கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத மோசமான வேலை வாய்ப்பின்மை, சுமார் 60 லட்சம் சிறு மற்றும் குரு தொழில்கள் முடக்கம், வணிகங்களில் மந்த நிலை, 84% மக்களுக்கு வருமானம் குறைப்பு, 12 கோடி பேருக்கு வேலை இழப்பு.
இப்படி யாருக்கு நல்ல நாள் வந்தது என்பதை மக்கள் எப்போது உணர்ந்தார்களோ அப்போது இந்த மோடி அரசு மக்கள் மத்தியில் அம்பலப்பட்டது.
அம்பலப்பட்ட மோடி அரசின் மோசடி
அம்பலப்பட்டு போன மோடி அரசு அதனை மூடி மறைக்க நாட்டில் வெறுப்பையும் பிரிவினையையும் உண்டாக்கியது. காவிகளை கொண்டு கலவரத்தை உண்டாக்கி மக்களை திசை திருப்பியது.
மக்களும் யாருக்கு நல்ல நாள் வந்தது என்பதை பற்றி கேள்வி கேட்பதற்கு பதிலாக எப்போது அமைதி திரும்பும் என்ற சிந்தனைக்கு மடைமாற்றம் செய்யப்பட்டனர்.
உண்மையில் நல்ல நாள் எப்போது இருந்தது?
உண்மையில் எப்போது நல்ல நாள் இருந்தது என்பதை மக்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளனர்.
ஆம் பெட்ரோல் விலை ₹ 70 டீசல் விலை ₹ 56 சமையல் எரிவாயு விலை ₹400 என எப்போது இருந்ததோ அப்போதுதான் நல்ல நாளும் இருந்திருக்கிறது.
86 கோடி மக்களுக்கு உணவு உரிமை கிடைத்த போது, 62 கோடி விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி கிடைத்த போது, பயிர்களுக்கு சரியான விலையும் அவர்களின் நில உரிமையும் கிடைத்த போது, 10 கோடி பழங்குடியின சகோதரர்கள் தங்கள் வளங்களில் உரிமை பெற்றபோது, கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு கல்வி பெறும் உரிமை கிடைத்த போது, MGNREGA வின் கீழ் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு வேலை செய்யும் உரிமை கிடைத்த போது நல்ல நாள் இருந்தது. அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது.
உலகின் பல்வேறு குறியீடுகளில் ஒன்பது ஆண்டுகளில் நாட்டின் நிலை மோசமாக மாறி தற்போது மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது என உலகளாவிய ரிப்போர்ட்டுகள் தெரிவிக்கின்றன.
மோடியின் மோசடி
பாஜகவும் பணவீக்கமும்
பிஜேபியின் திமிர் பிடித்த அதிகாரத்தின் கீழ் மக்கள் கொள்ளையடிக்கப்படுகிறார்கள், கொடுமைப்படுத்தப்படுகிறார்கள், அவர்களின் வருமானம் குறைந்து வருகிறது, பணவீக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
மோடியும் பிஜேபியும் நல்ல நாள் என்ற அட்டகாசமான பொய்களைச் சொல்லி வாக்குகளை பெற்றனர்.
ஆனால் இப்போது பணவீக்கம் உயர்ந்து மக்களின் வாழ்க்கை தரம் குறைந்துவிட்டது.
ஏப்ரல் 2022 ல் மொத்த பணவீக்கம் 15.8 சதவீதமாக உயர்ந்தது, இது 30 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சமாகும்.
மே 2022-ல் சில்லறை பணவீக்கம் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.8 சதவீதமாக உயர்ந்தது.
வரி உயர்வால் விலைவாசி உயர்வு
சமையல் பொருட்கள், உணவுகள், பழங்கள், காய்கறிகள், பால், மாவு, பருப்பு, எண்ணெய், மசாலா, சோப்பு, ஷாம்பு என அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து மக்கள் பெரும் அவதிக்கு ஆளாக்கப்பட்டு நசுக்கப்படுகின்றனர். தற்போதைய சூழலில் தக்காளி வாங்க கூட யோசிக்க வேண்டி இருக்கிறது.
ஏப்ரல் 1 2022 முதல் மோடி அரசாங்கம் தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதனப்பெட்டி, ஏசி போன்றவற்றை தயாரிக்க பயன்படும் அலுமினியம், தாது மற்றும் கான்சென்ட்ரேட்டிற்கு 30 சதவீத வரி விதித்தது. இதனால் தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதனப்பெட்டி, ஏசி போன்ற ஒவ்வொன்றின் விளையும் 20 முதல் 30 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.
எரிபொருட்கள் மீதான வரி
பெட்ரோல் விலையும் மக்களின் நிலையும்
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வரி விதிப்பதன் மூலம் மட்டும் மோடி அரசு 27.5 லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணத்தில் வருவாய் ஈட்டுகிறது.
பெட்ரோல் டீசல் விலைகளை 2 ரூபாய் 2 ரூபாய் என 5 முறை ஏற்றிவிட்டு ஒருமுறை 4 ரூபாய் தள்ளுபடி கொடுத்து மக்களை முட்டாளாக்குவார் மோடி.
2014 ஏப்ரலில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததைவிட இன்று டீசல் மீதான கலால் வரி 344 சதவிகிதமும், பெட்ரோல் மீதான கலால் வரி 110 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.
கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கச்சா எண்ணெயின் விலை 100 டாலருக்கு அதிகமாக இருந்த நேரத்தில் அதிகபட்சமாக பெட்ரோல் ரூ 71க்கு விற்க்கப்பட்டது.
2015 க்கு பின்னர் படிப்படியாக கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், ஒன்றிய மோடி அரசு படிப்படியாக பெட்ரோல் விலையை ஏற்றியது.
கடந்த 2020 ஏப்ரல் மாதம் கச்சா எண்ணெயின் விலை 11.26 டாலரில் இருக்கும் போது கூட பெட்ரோல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய் 100 டாலராக இருந்த போது கூட 71 ரூபாய்க்கு கிடைத்தது காங்கிரஸ் ஆட்சியில்.
ஆனால் கச்சா எண்ணெய் 12 டாலருக்கும் குறைவாக இருந்த காலத்தில் கூட 70 ரூபாய்க்கு குறைத்து கொடுக்க விரும்பவில்லை மோடி அரசு.எரிவாயு விலையும் தேர்தல் நேரமும்
2013 – 14 ஆம் ஆண்டில் காங்கிரஸ் அரசு சமையல் எரிவாயு பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கிடைப்பதற்காக ஆண்டுக்கு 46,458 கோடி ரூபாய் மானியமாக வழங்கியது.
இதனால் வீட்டு உபயோக சமையல் எரிவாயு காங்கிரஸ் ஆட்சியின் இறுதியில் (ஏப்ரல் – மே 2014) ரூபாய் 410 ஆக இருந்தது.
2014 ஏப்ரல் மே மாதங்களில் வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலை 1541 ஆக இருந்தது. ஆனால் தற்போது 2355 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.
சி.என்.ஜி விலை 2014 ஆம் ஆண்டில் கிலோ ஒன்றுக்கு 35 ஆக இருந்தது தற்போது 117 சதவீதம் அதிகரித்து சுமார் ஒரு கிலோ ரூ 75.61 பைசாவாக இருக்கிறது.
குழாய் வழி இயற்கை எரிவாயு 1 யூனிட் விலை ரூ 24.50 பைசாவாக இருந்தது. தற்போது கிட்டத்தட்ட 100% அதிகரித்து ஒரு யூனிட் ரூ 45.86 பைசாவாக உள்ளது.
தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) அத்யாவசிய மருந்துகளின் விலையை கடந்த 2019ல் மோடி அரசு 15 சதவீதம் உயர்த்தியது. மேலும், தற்போது 800 அத்தியாவசிய மருந்துகளின் விலையை 10.76% சதவிகிதம் மீண்டும் உயர்த்தி உள்ளது.
அதிர வைக்கும் மோடியின் மோசடிகள் அடுத்த பதிவில் தொடரும்…
Source : Indian National Congress இணையதளம்
Is Uniform Civil Code good for India?பொது சிவில் சட்டம் இந்தியாவிற்கு நல்லதா?