இஸ்லாமும் முஸ்லிம்களும் 4
சமுதாய சொந்தங்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
பொருளடக்கம்
பொருளடக்கம்
இதுவரை:
இஸ்லாமும் முஸ்லிம்களும் பகுதியின் 3ஆம் பகுதியில்…
1. படைத்தவனை விட அவனால் படைத்து சபிக்கப்பட்டவனுக்கே கட்டுப்பட்டு வாழ்வது சரியா?
2. அல்லாஹ்வின் அழகிய தீர்வை கையில் வைத்துக்கொண்டு தீர்வைத் தேடி அழைவது முறையா?
3. ஒவ்வொறு கூட்டத்தார்களும் செய்த அட்டூழியங்களையும், அவர்களை திருத்த நபிமார்களையும் அனுப்பிய அல்லாஹ் திருந்தாத மக்களை எவ்வாறு தண்டிதான் என்பதையும் பார்த்தோம்.
இஸ்லாமும் முஸ்லிம்களும் 4 என்ற இந்த பகுதியில் இன்றைய முஸ்லிம்களின் நிலையை பார்போம்…
இன்ஷா அல்லாஹ்…
இஸ்லாமும் முஸ்லிம்களும் 4 – யூத கலாச்சாரம் உள்நுழைவு
இன்று உலக அளவில் முஸ்லிம்களின் நிலை என்ன என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
உண்மையான இஸ்லாம் படிப்படியாக முஸ்லிம்களின் மனங்களிலிருந்து வெளியேறி வருகின்றது. இஸ்லாம் என்ற பெயரில் யூத கலாச்சாரங்களை படிப்படியாக திணிக்கப்படுகின்றதை அன்றாடம் பார்த்து வருகின்றோம்.
இஸ்லாமும் முஸ்லிம்களும் 4 – யூத, கிருத்தவர்களின் எதிர்பார்ப்பு
யூத கலாச்சாரம் திணிக்கப்படுவது ஏன்? அதற்கான விடை இதோ : யூதர்களும், கிருத்தவர்களும் ஒரு நபியை எதிர் பார்திருந்தனர்.
அந்த சமயத்தில் அரேபிய பெருவெளியில் அந்த நபி தோன்றியது அவர்களுக்கு தெரிய வருகின்றது.
ஆனால் யூதர்களும், கிருத்தவர்களும் தங்களது கூட்டத்திலிருந்து தான் இறுதி நபி தோன்றுவார் என்று நம்பி வந்தனர்.
அதற்க்கு மாற்றமாக அல்லாஹ் இறுதி நபியை அரேபிய மக்கள் மத்தியில் தோன்றச்செய்து விட்டான் என்பதை அறிந்து அந்த யூத, கிருத்தவர்கள் மனம்புரண்டாக வேண்டுமென்றே முஹம்மது நபியை எதிர்க்க துணிந்தனர்.
இதனை அல்லாஹ்வே தனது திருமறையில் சொல்லிக்காட்டுகின்றான்.
”எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்: ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர். (அல்குர்ஆன் : 2:146)”
ஆக யூதர்களுக்கும், கிருத்தவர்களுக்கும் தெளிவாக தெரியும் தாம் நரகத்திற்கே செல்வோம் என்று. அதேவேலையில் முஸ்லிம்களையும் வழிகெடுத்து அவர்களும் வழிகெட்டு நரகத்தை சுவைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.
இதை ஒரு ஊகமாக சொல்லவில்லை. அதற்க்கும் ஆதாரம் உள்ளது. கீழே உள்ள ஹதீஸை எந்த அளவுக்கு முஸ்லிம்களாகிய நாம் நம்புகின்றோமோ அதை விட அதிகம் யூதர்கள் நம்புகின்றனர்.
அது என்ன ஹதீஸ்? எந்த வகையில் யூதர்கள் நம்புகிறார்கள்? ஹதீஸை தொடர்ந்து பார்ப்போம்.
குர்ஆனையும் ஹதீஸையும் நம்பும் யூதர்கள்
முஸ்லிம்கள் யூதர்களுடன் யுத்தம் செய்யும் வரை மறுமை நாள் வராது. மரங்கள் கற்களின் பின்னால் ஓடி ஒளியும் யூதர்களை முஸ்லிம்கள் அழிப்பார்கள். அல்லாஹ்வின் அடியானே! முஸ்லிமே! இதோ எனக்குப் பின்னால் யூதன் மறைந்துள்ளான். “அவனைக் கொல்” என்று கிர்கத் என்ற யூத மரத்தைத்தவிர அனைத்துக் கற்களும் மரங்களும் முஸ்லிம்களுடன் பேசும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), நூல் : முஸ்லிம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம்கள் யூதர்களுடன் போர் தொடுக்காத வரை யுக முடிவுநாள் வராது. அப்போது முஸ்லிம்கள் (பதிலடியாக) யூதர்களைக் கொல்வார்கள். எந்த அளவுக்கென்றால், யூதன் ஒருவன் அந்தக் கல்லுக்கும் மரத்துக்கும் பின்னால் ஒளிந்துகொள்வான். உடனே அந்தக் கல், அல்லது அந்த மரம், ”முஸ்லிமே! அல்லாஹ்வின் அடியாரே! இதோ எனக்குப் பின்னால் யூதன் ஒருவன் இருக்கிறான். உடனே நீ வந்து அவனைக் கொன்றுவிடு” என்று கூறும். பெரிய உடை மரத்தைத் தவிர. ஏனெனில், அது யூதர்களின் மரமாகும். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), நூல் : முஸ்லிம்
கிர்கத்தை வளர்க்கும் யூதர்கள்
சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலில் யூதர்கள் அங்கிருந்த ஒலிவ மரங்களை மொத்தமாக வேறோடு பிடுங்கி விட்டார்கள்.
மேலும் கிர்கத் என்ற வகை மரத்தை அதிகமாக வளர்த்து வருகின்றார்கள்.
காரணம் நபியின் முன்னரிவிப்பை அவர்கள் நம்புவதாலேயே.
கிர்கத் என்ற மரத்தை தவிர மற்ற அனைத்து மரங்களும் யூதர்களை காட்டிக் கொடுத்துவிடும் என்பதை சொன்னது முஹம்மது நபி. முழுமையாக நம்புவது யூதர்கள் என்பதை இதன் மூலம் அறிகின்றோம்.
ஜும்ஆ குறித்து யூத அதிகாரி
மேலும் ஒரு யூத அதிகாரி பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளிக்கின்றான்.
அதில் அவன் சொல்லும் விசயம் சற்று சமூகத்தால் ஆளமாக யோசிக்க வேண்டியுள்ளது. “எங்களை முஸ்லிம்களால் வெற்றி கொள்ள முடியாது.
எதுவரை எனில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு வரும் மக்கள் எப்போது ஃபஜ்ர் தொழுகைக்கு வருகின்றார்களோ அதுவரை” ஒரு யூதன் புரிந்து வைத்ததை கூட நம் சமூகத்தால் புரிந்துகொள்ள முடியாமல் போனதா?
இந்த இஸ்லாமிய சமூகத்தை குர்ஆன் மற்றும் ஹதீஸ்களிலிருந்து முற்றிலும் திருப்பிவிட யூதர்களும், கிருத்தவர்களும் செய்யும் சூழ்சிகள் தான், அரை குறை ஆடை கலாசாரம், இணைய தளங்களின் மூலம் ஆபாசத்தை பரப்புவது, பொழுது போக்கு என்ற பெயரில் வீணான கேளிக்கைகள் என்பதெல்லாம்.
இந்த சமூகத்தை குறிவைத்து பல சதிகள் நடந்து கொண்டிருக்கின்றன. நமது இஸ்லாமிய சமூகமோ ஒன்றும் நடந்திராததைப் போல் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கின்றது என்பது தான் வேதனையிலும் வேதனை. விழித்தெளுமா என் சமூகம்?
இறைவன் நாடினால் பகுதி 5ல் தொடருவோம்…
முந்தைய பதிவை படிக்க… இஸ்லாமும் முஸ்லிம்களும் பகுதி – 3