தமுமுக மற்றும் மமக வில் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி குழப்பத்திற்கு யார் காரணம்? என்பதை அறிவதை விட குழப்பத்திற்கு முடிவு கட்டியாக வேண்டும்.
நேற்றுவரை அண்ணன் தம்பியாக, உடலும் உயிருமாக, நகமும் சதையுமாக இருந்த கழக சொந்தங்கள் இன்று கீரியும் பாம்புமாக மாறி ஒருவருக்கொருவர் கொச்சையான வார்த்தைகளால் வசை பாடி மகிழ்கின்ற சூழலை பார்க்கையில் இது நம்மவர்களா என்று எண்ணி கண்ணீர் சிந்த வைக்கின்றது.
இரு பெரும் பிரிவாக பிரிந்து நிர்க்கும் நம் சொந்தங்கள் நியாயத்தின் அடிப்படையிலும், சமுதாய நல அக்கரையுடனும் ஒருமித்த கருத்திற்கு வர வேண்டிய தருணம் இது. ஒருவரை ஒருவர் வசை பாடும் சொந்தங்கள், நாளை இதே பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வையோ அல்லது தமீமுன் அன்சாரியையோ விட்டு விழகி செல்லலாம். ஆனால் நாம் ஒரு தாய் தந்தையின் பிள்ளைகள் என்பதில் மாற்றம் இல்லை.
இரு தரப்பின் நியாயங்களை கேட்ட பின் யார் சொல்வது சரி என்பதை சிந்தித்து அறியும் அறிவை அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ளான். தனி ஒருவர் ( பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வின் அல்லது தமீமுன் அன்சாரியின் ) மீது கொண்ட அளவற்ற பாசம் நியாயத்தை விட்டும் நம்மை தூரமாக்கிவிடும்.
அதுமட்டுமில்லாமல் நாம் அறிந்தவகையில் இரு தரப்பாருக்கும் இடையில் பெரிய அளவிலான பிரச்சினைகள் இருப்பதாக தோண்றவில்லை. ஒரு இடத்தில் கூடி பேசினால் அனைத்து பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வரும்.
அதே வேலையில் தலைமை நிர்வாகம் பொதுக்குழு கூட்டியதும், அதில் தமீமுன் அன்சாரியை நீக்கியதும் சரியான நடவடிக்கையாக தோண்றவில்லை. கொஞ்சம் பொருமை காத்திருக்கலாம். அல்லது குறிப்பிட்ட இடைவெளி விட்டு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கலாம். அவசர கோலத்தில் எடுக்கப்பட்ட முடிவாகவே தோண்றுகிறது.
மேலும் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வையே தலைவராக அறிவித்ததும் இதில் பலருக்கு வீன் சந்தேகங்களை கிளப்பியுள்ளது. ஏனென்றால் அமைப்பில் உள்ளவர்கள் மலக்குகலல்லர் மனிதர்கள் தானே.
மேலும் ஒரு தரப்பு நியாயங்கள் இயக்க சகோதர்களுக்கு 6ம் தேதி நடை பெற்ற பொதுக்குழுவில் தெரியப்படுத்தப்பட்டு விட்டது. மறு தரப்பின் நியாயங்களை அறியும் வாய்ப்பை தமீமுன் அன்சாரி, கூட்டும் கூட்டத்தில் கொடுக்க இருக்கின்றார். அக் கூட்டத்திற்கு செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்வதும் நியாயமில்லை.
நமது அமைப்பு ஒரு ஜனநாயக அமைப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்றால் தமீமுன் அன்சாரி கூட்டும் கூட்டத்திற்கு செல்ல அனுமதித்திருக்க வேண்டும்.
அதே போல தமீமுன் அன்சாரியும் அவசர கோலத்தில் எடுக்கும் முடிவாகவே இக்கூட்டத்தை கருத வேண்டியுள்ளது. அதற்கான நிர்பந்தம் உள்ளதா என்பதும் கேள்வியே…
ஆக இரு தரப்பிலும் சில கருத்து வேறுபாடுகள் தோண்றியுள்ளது. இணைந்து பேசினால் தீர்வு கிடைக்கும். அல்லாஹ் நம்மை ஒற்றுமை படுத்துவானாக…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
வ அலைக்கும் ஸலாம் ரஹ்.