தமுமுக கடந்து வந்த பாதை
அன்பும் பாசமும் நிறைந்த சமுதாய சொந்தங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
இது நெடிய பயணம்…
கொடிய சதியாவும்…
தவிடு பொடியாகி…
முடியும் தருணம்…
என்ற கொள்கை முழக்கத்தோடு 1995ம் ஆண்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டு 19 ஆண்டுகளை கடந்து 20 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.
தமுமுக கடந்து வந்த பாதை – கரடு முரடான பாதை
பல்வேறு தடைகளை உடைத்தெறிந்தும், பல்வேறு வேதனைகளை சாதனைகளாக்கியும், பல்வேறு துயரங்களை உயர்ந்த சிகரங்களாக்கியும், களப்பணிகளிலே கலங்காது நின்ற தமுமுக தான் கடந்து வந்த கரடுமுரடான பாதைகளை பூப்பாதைகளாக மாற்றி அடுத்து வந்த சந்ததிகளை புன்னகை பூக்க செய்துள்ளது.
மனிதநேயம்
எல்லாம் கிடைக்கின்ற இந்த நூற்றாண்டில் எங்குமே கிடைக்காமல் தொலைந்து போனது மனிதநேயம், நீதி, நியாயம். இவைகளை உலகில் மலரச்செய்ய நூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ்களோடு லட்சக்கணக்கானோருக்கு அவசர உதவிகள், லட்சக்கணக்கானோருக்கு அவசர ரத்த தானங்கள், ஆயிரக்கணக்கான மருத்துவ முகாம்கள், ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சிகிச்சைகள், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிகள், சிறையில் வாழும் சமுதாய சொந்தங்களுக்கு பல்வேறு உதவிகள், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களிலும், விபத்துக்களிலும் இராணுவத்தை மிஞ்சும் களப்பணிகள், சமூக அவலங்களுக்கு எதிரான போராட்டங்கள் என தமுமுகவின் மனிதநேய செயல்பாடுகள் எண்ணிலடங்காதது.
தமுமுகவின் வீரியமும், வீரமும், விவேகமும், களப்பணிகளும், சமூக சேவைகளும் உலக வரலாற்றில் எங்கும் எந்த கட்சியிலும் காணமுடியாத அளவிற்கு தனது மனித நேய பணிகளை செய்துள்ளது.
கடந்த காலங்கள் கற்றுக்கொடுத்த பல்வேறு பாடங்களோடு தேர்தல் அரசியலிலும் தமுமுக தனது பார்வையை திருப்பியது. அதிகார அவைகளில் நம் உரிமைகளை வெல்ல உதித்தது தான் மனிதநேய மக்கள் கட்சி.
இது இறைவன் நாடினால் பல நூற்றாண்டுகளை கடந்து வரலாற்றில் மனிதநேயத்தை பேசும் அரசியல் பேரியக்கம்.
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்
முந்தைய பதிவை படிக்க : எப்படி இருந்த சமுதாயம் இப்படியாச்சி
5