Hajj-Qurbani – தியாகத் திருநாள்
மண்ணுக்கு மாரடிக்கும் மடையர்களே
மகத்துவத்தை மறந்துவிட்ட மூடர்களே
வீட்டிற்கு ஒரு மரம் வளர்போம் என்பதை போல
வீட்டிற்கு ஒரு ஆடறுக்கும் சடங்கு தானோ
நபி இப்ராஹீமின் இறை அச்சத்தை மறந்ததேனோ
நபி இஸ்மாயீலின் தியாகத்தை மறந்ததேனோ
அன்று வாங்கிய ஆடுகளை அன்றே அறுப்பது நியாயமா?
நபி இப்ராஹீமின் தியாகத்தை உணரத்தான் முடியுமா?
கடமைக்கும் பெருமைக்கும் ஆடறுக்கும் அவலம்
இம்மைக்கும் மறுமைக்கும் மிஞ்சுவது கேவலம்
காசு பணம் விரயமாய் போகுதே
நன்மைகள் யாவும் நாசமாய் ஆகுதே
மறுமைக்கு செய்ய வேண்டிய தியாகத்தை
பெருமைக்கு செய்கின்ற மக்களே
தியாகமும் அதனால் ஏற்படும் இறை அச்சமுமே
நமக்கு இறுதி மிச்சம் என்பதை உணருங்கள்
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்
முந்தைய பதிவை படிக்க சுற்றிவர செல்லலாமே சுற்றுலா..!