பொருளடக்கம்
Be Silence – மவுனமாய் இருக்கலாமே…
நாடே தூற்றியது…
நாவடக்கம் மீறியது…
நோயின் பெயராலே…
நோவினை செய்தது…
நரிகளின் ஊளையில்…
நானிலமே மாறியது…
நாடி நரம்புகள் தளர்ந்தது…
நம்பிக்கைகள் தகர்ந்தது…
காவியின் சூழ்ச்சிக்கு…
காலமும் கனிந்தது…
காணாத காட்சிகளெல்லாம்…
கண்களும் கண்டது…
வீணாக உதவி செய்து…
வீண் பழி சுமக்காமல்
விழிப்புடன் வீற்றிருப்போம்…
வீட்டிலேயே காத்திருப்போம்…
மதத் துவேஷம் மூண்டது…
மனிதாபிமானம் மாண்டது…
மருந்து இல்லா நிலையிலும்…
மரணமென்ற வலியிலும்…
மனம் நோக வாழ்வதை விட
மவுனமாய் இருக்கலாமே…
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்
முந்தைய பதிவை படிக்க… Covid 19 – Failure of the Union Government – ஒன்றிய அரசின் தோல்வி