உலகை சிறையாய் கொள்வோம்
நடை பிணம் தானே
குணமில்லா மனிதன்
வாழ்வது வீண் தானே
தினக் கூலிகள் எல்லாம்
தெருக் கோடியிலே
கோடிகள் எல்லாம்
கொடும் கேடிகளின் கைகளிலே
பண்புகள் இருக்குமிடம்
பணம் இருப்பதில்லை
பணம் இருக்குமிடம்
நல்ல மனம் இருப்பதில்லை
முழு நேர உழைப்புக்கு
ஒரு வேலை உணவு
ஒரு மணி நேர உழைப்புக்கு
ஓராண்டு உணவு
ஒருவேலை உணவு,
கிடைத்திடும் என்பது பலரின் கனவு
இது என்ன உலகமடா?
அற்ப சுகம் தேடி அலைகின்றது மனது
உலகை சிறையாய் கொண்டால்
மறுமையின் சுவனம் நமது
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்
முந்தைய பதிவு : பெண்களுக்கு எதிரானதா இஸ்லாம்?