கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்

பள்ளிப்படிப்பிலேயே எல்லா மாணவர்களும் , நான் டாக்டர் ஆக போறேன், என்ஜினியர் ஆக போறேன், கலெக்டர் ஆக போறேன்,போலீஸ் ஆக போறேன் என்று சொல்வார்கள், ஆனால் வளர்ந்ததும் அது நடக்குமா என்றால் கேள்விக்குறி தான். ஆயிரத்தில் ஒன்று தான் நடக்க வாய்ப்பிருக்கும். மற்ற அனைவரும் சொன்னது ஒன்றும், நடந்தது ஒன்றுமாகத்தான் இருக்கும்.
பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு பல கனவுகளோடு பெரு நகரங்களை நோக்கி சென்றால்  வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. காரணம் போட்டி உலகம். திரமை என்பதெல்லாம் மலையேரிவிட்ட காலம்.  வேலை கிடைத்தாலும் அது நிரந்தரமா? அதுவும் கேள்விக்குறி தான். பெரு நகரங்களும் கைவிட்ட நிலையில் சொந்த ஊரிலேயே ஏதாவது பிழைக்க முடியுமா என்று வழி தேடி சொந்த ஊருக்கு வந்தால் என்ன செய்வது..? யாரிடம் வேலை கேட்பது? என பல்வேறு கேள்விகளோடு ஏதாவதொரு, கிடைத்த வேலையை செய்து கொண்டு சில காலம் கடக்கும், அதற்க்குள்ளாகவே திருமணம், குழந்தை, குடும்பம் என ஒரு வட்டத்திற்குள் முடங்கும் சூழல். பல பொருப்புகளும் தலையில் பாரமாக,  அவனுடைய இள வயது கனவுகளும் படிப்பு முடிந்த கால கனவுகளும் வெறும் கனவாகவே தான் இருக்கும். இதற்கெல்லாம் காரணம் எது? யாரை குற்றம் சொல்வது? விடை தெரியா வினாக்களோடும் வெற்றியை இழந்த விரக்தியோடும் மீத வாழ்க்கையும் கழியும்.
சிறு வயதில் நமது எண்ணம், எதிர்பார்ப்பு எல்லாமே போலீஸ், கலெக்டர், டாக்டர், இன்ஜினியர் என்பது தான்.  இந்த மாய தோற்றம் தான் நமது வாழ்வை கேள்விக்குறியாக்குகின்றது. புரியாத பருவத்தில் கண்ணுக்கு தெரியாத கஸ்டங்களை அறியாத நிலையில்  கண்ட கனவு கானல் நீர் போல் ஆகிவிடுகின்றது. இறுதியில் ”நான் ஆசைப்பட்டது தான் எனக்கு கிடைக்கல என் புள்ளைக்காவது கிடைக்கட்டும்” என நம் வாரிசையும் முடமாக்கவே துணிகின்றோம்.
அதற்க்காக இலக்கு இல்லாமல் பயணிப்பது போல் கற்பது என்பதல்ல. மாறாக இலக்கை தெளிவாகவும், காலத்திற்க்கு ஏற்றார் போலவும், அதனை அடைவதற்காண சரியான வழிகளையும் சிறு வயது முதலே தேட வேண்டும். அதே வேளையில் அது ஒன்றை மட்டுமே இலக்காக கொள்ளாமல் மற்றொறு இலக்கையும் அமைத்துக் கொள்வது அவசியம். அதாவது சிறப்பான சுய தொழில் சார்ந்த ஒரு துறையை பற்றியும் கற்று தேர்வது வாழ்க்கையின் அஸ்திவாரத்தை பலப்படுத்தும். பள்ளிப்படிப்பு கை கொடுக்காத காலங்களில் உறுதியாக கை கொடுப்பது சுய தொழில் தான்.
“கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்”
இறைவன் நாடினால் சுய தொழில்கள் பற்றி மற்றொறு தலைப்பில் சந்திக்கின்றேன்.
அன்புடன்
முட்துப்பேட்டை அலீம்

About வலையுகம் அலீம்

Check Also

ஈதுல் ஃபித்ர்- நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

கண்ணியமிக்க மாதமான ரமலான் இவ்வாண்டு நமக்கு பல படிப்பினைகளை கற்றுக் கொடுத்துள்ளது. இவை எல்லாம் அல்லாஹ்வின் சோதனைகளில் ஒன்று என்ற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *