பொருளடக்கம்
Chennai Floods – Humanities | கனமழையை விட கனமான மனிதநேயம்
அன்புள்ளம் கொண்ட சமூகத்துக்கு…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
சென்னை மற்றும் கடலூரில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இலட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களிலும், பள்ளிவாசல்களிலும் தங்க வைக்கப்பட்டு உதவப்பட்டு வருகின்றார்கள்.
இந் நிலையில் இஸ்லாமிய சமூகம் செய்துவரும் அளப்பரிய சேவையை பாராட்டாதவர்களே இல்லை. தனது சொந்த குடும்பம் பாதிக்கப்பட்டால் கூட இந்த அளவுக்கு செயல்படுவார்களா என்று சொல்லும் அளவில் தங்களின் சகோதரத்துவ பாசத்தை (Humanities) கனமழையைவிட கனமாகவே பதிவு செய்துவிட்டது நமது சமூகம் என்று சொல்வது மிகையாகாது.
அதே வேளையில் இந்த அளப்பரிய செயல்பாடுகளை ஆரம்ப கட்டத்தில் ஊடகங்கள் மறைத்தாலும் தற்போது வேறு வழி இன்றி ஊடகங்கள் பேச வேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளன. அதனையும் நம் சமூகத்தின் செயல்பாடுகள் வென்றது என்றே சொல்லலாம்.
ஆனாலும் இன்று இவ்வளவு பெரிய செயல்களை செய்யும் இந்த இஸ்லாமிய சமூகம் இந்த வெள்ளத்தில் மட்டும்தான் செயலாற்றுகின்றனவா?
Humanities மனிதநேயம்
மாறாக உலக அளவில் பல்வேறு நாடுகள் பாதிப்படைய காரணமான சுனாமி பேரழிவின் போது பாதிக்கப்பட்டதில் நமது தமிழகமும் ஒன்று. அன்றைய கால சூழலில் தமுமுக போன்ற இஸ்லாமிய அமைப்புகள் மட்டுமே மீட்புப்பணியில் செம்மையாக செயல்பட்டது. அன்றைய பாரத பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் பாராட்டப்பட்ட அமைப்பு தான் தமுமுக. மீட்புப்பணியில் இந்திய இராணுவம் பின்வாங்கிய இடங்களில் கூட இஸ்லாமிய சமூகம் அருவருப்பு பார்க்காமல் மனிதாபிமானத்தை பார்த்து செயலாற்றியது.
ஆனால் அன்றைய கால சூழலில் இன்று இருப்பது போன்ற சமூக வலைதளங்கள் மக்கள் மத்தியில் முழுமையாக சென்றடையாததால் ஊடகங்கள் மறைத்து விட்டன.
இந்திய விடுதலைக்கு போராடிய சமூகங்களின் விகிதாசாரத்தில் அதிக சதவிகிதத்தில் போராடிய சமூகம் தான் இந்த இஸ்லாமிய சமூகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இந் நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் பாசம் கொண்ட சமூகம் சில சமூக விரோத சக்திகளின் அதிகார மற்றும் ஆதிக்க வெரியால் குற்றப்பரம்பரை போன்று சித்தரிக்கப்பட்டு வருகின்றது என்பதே உண்மை. இதனை இந்திய சமூகம் மெல்ல மெல்ல உணர்ந்து வருகின்றது என்பதே நிதர்சனம்.
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்
முந்தைய பதிவை படிக்க : கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்