பொருளடக்கம்
News18 – நியூஸ்18 சேனல் க(ள்)ள ஆய்வு உண்மை என்ன?
முன்னுரை
பொது சிவில் சட்டத்தை பெரும்பாலான இஸ்லாமிய பெண்கள் ஆதரிப்பதாக நியூஸ்18 சேனல் க(ள்)ள ஆய்வு செய்துள்ளதாக அந்த செய்தி நிருவனத்தின் இணையதள பக்கங்கள் சொல்கின்றன. உண்மை என்ன?
கடந்த பல வருடங்களாக மோடியின் ஒன்றிய அரசு ஆட்சிப்பொருப்பேற்ற நாள் முதல் ஊடகங்கள் காவி மோடிக்கு ஒத்து ஊதும் ஊது குழல்களாக மாறி வருவதை பார்க்க முடிந்தது.
ஒத்து ஊத மறுக்கும் சேனல்கள் காவி மோடி வகையராக்களுக்கு வார்த்து கொடுக்கப்படும். அப்படி போய் விடக்கூடாது என்பதற்காக ஊடக தர்மத்திற்கு எதிராக பல சேனல்கள் தனது சுய கவுரவத்தை இழந்து ஊடக அறப்பணியை மறந்து ஊது குழலாக மாறி உள்ளது என்பதே எதார்த்தமான உண்மை.
அந்த வரிசையில் நியூஸ்18 சேனல் ஒருபடி மேலே சென்று காவிக்கு சொம்படிக்கும் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டது.
கேள்விகள்
- க(ள்)ள ஆய்வில் எத்தனை இஸ்லாமிய பெண்கள் உட்படுத்தப்பட்டார்கள்?
- எந்தெந்த பகுதிகளில் க(ள்)ள ஆய்வு செய்யப்பட்டது?
- என்ன மாதிரியான கேள்விகள் கேட்கப்பட்டன?
- அதற்கு அவர்கள் அளித்த பதில்கள் என்ன?
எந்த கேள்விக்கும் நியூஸ்18 இடம் எந்த பதிலும் இருக்கப்போவதில்லை. அப்படியே இருந்தாலும் அது வடநாட்டு மக்களை காட்டி தப்பிக்கும் என்பதில் ஐயமில்லை.
முத்தலாக்
முத்தலாக் விசயத்தை பேசியுள்ள நியூஸ்18 முத்தலாக் சட்டவிரோதமானதாக சொல்கின்றது.
முத்தலாக் என ஒரே வார்த்தையில் சொல்லும் தலாக் மார்க்க விரோதமானது என்பதை முஸ்லிம்கள் உறுதியாக அறிவார்கள்.
அதே வேளையில் மூன்று தவணையாக குர்ஆன் சொல்லும் வழியில் முத்தலாக் என்பது சட்டப்பூர்வமானது மட்டுமல்ல அறிவுப்பூர்வமானதும் எல்லா காலத்திற்கும் இன்னும் சொல்லப்போனால் எல்லா சமூகத்திற்கும் ஏற்புடையது.
எகிப்து, சூடான், சிரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் முத்தலாக் முஸ்லீம் கலாச்சாரத் தன்மையற்றது என அறிவித்துள்ளதாக சொல்லும் நியூஸ்18, இஸ்லாம் அனுமதிக்கும் குர்ஆன் வழியிலான முத்தலாக் பற்றி பேசவே இல்லை.
ஹிஜாப்
எகிப்திய அரசு கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவது சட்ட விரோதம் என்று அறிவிக்க முயற்சி எடுத்து வருவதாக நியூஸ்18 தனது காவி நிறத்தை பூசியுள்ளது. எப்போது எங்கே அறிவித்தது என்ற எந்த விபரமும் இல்லை.
காவிகளின் கண்கொண்டு நியூஸ்18 உலகை பார்க்கின்றது என்பது மட்டும் தெளிவாகின்றது.
காஃபிர் என்றால் என்ன?
ஒருபடி மேலே சென்று ”முற்றிலும் முரணாக இருக்கும் ‘காஃபிர்’ உள்ளிட்ட வார்த்தைகளை ஒழித்துக்கட்ட இந்தோனேசிய அரசு முயற்சித்து வருவதாக” ஒரு அயோக்கிய தனமான வார்த்தையை நியூஸ்18 பிரயோகித்துள்ளது.
காஃபிர் என்றால் அல்லாஹ்வை நிராகரிப்பவர் என்பதை தாண்டி வேறு அர்த்தம் இல்லை.
அந்த வார்த்தை உனக்கு கேட்க கஸ்டமாக இருந்தால் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்.
இன்னும் சொல்லப்போனால், அல்லாஹ் தன் குர்ஆனில் சொல்லிய வார்த்தைகள் வேத வார்த்தைகள் அதனை நீக்க அல்ல அதில் ஒரு எழுத்தைக்கூட மாற்ற முடியாது எவனாலும் என்பதே உண்மை.
இறை வேதத்தின் சத்திய வார்த்தைகளை ஒழித்துக்கட்ட எவனுக்கடா முடியும்? முடிந்தால் கை வைத்துப்பார்.
முற்போக்கு சட்டங்கள் முஸ்லிம்களால் எதிர்க்கப்படுகின்றனவா?
மேலும் நியூஸ்18 தனது காவித்தனத்தை சிறப்பாக வெளிக்காட்டுகிறது பாருங்கள். இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாட்டில், வாங்கு வங்கி அரசியல் காரணமாக முற்போக்கான ஒன்றாக அமையும் சட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து எதிர்க்கப்பட்டு வருகின்றனவாம்.
எது முற்போக்கானது? பிற்போக்குத்தனத்தோடு ஆட்சி செய்யும் ஒன்றிய காவி அரசு முஸ்லிம்களை கருவருக்க வேண்டும் என்று, இயற்றும் அனைத்து சட்டங்களும் முற்போக்கு சட்டங்களா?
ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் தெரிந்த உண்மை, செய்தி சேனல் நடத்தும் உனக்கு தெரியாமல் போனது ஏனோ தெரியவில்லை.
ஒன்றிய காவி அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை, என்ன புதிய முற்போக்கான சட்டங்களை, திட்டங்களை கொண்டுவந்து விலைவாசியை குறைத்தது, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியது? ஒன்றும் இல்லை என்பதை விட விலைவாசி உயர்வுக்கும், மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதற்கும் வழிவகுத்தது தான் ஒன்றிய அரசின் சாதனை என்பது மட்டுமே உண்மை.
க(ள்)ள ஆய்வில் கண்டரிந்த மற்றொரு உண்மையாம்
நாட்டு மக்கள் அனைவருக்குமான பொது சிவில் சட்டம் தொடர்பான விவரத்தை இந்திய சட்ட ஆணையம் ஆய்வு செய்து வருவதாக அறிவித்துள்ளதாம். அதே இந்திய சட்ட ஆணையம் கடந்த 2018 ஆம் வருடம் என்ன சொன்னது என்று தெரியுமா?
நியூஸ் 18 சொல்கின்றது “பொது சிவில் சட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியானவுடன் பொது சிவில் சட்டத்திற்கு எதிரான பல்வேறு எதிர்ப்புக் குரல்கள் எழுந்தது உண்மை தான்.
ஆனால், அந்த எதிர்ப்புக் குரல்கள் யாவும் சமூக மாற்றத்திற்கான குரல் அல்ல என்பதை நியூஸ்18 செய்தி நிறுவனம் க(ள்)ள ஆய்வின் மூலம் கண்டறிந்ததாம்.
சமூக மாற்றம் என்றால் என்ன என்றாவது தெரியுமா? ஒரு சமூகத்திற்குள் ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் அதனை மாற்ற முயற்சிக்கலாம்.
ஆனால் ஒரு சமூகத்தின் முற்போக்கான நிலையை ஒழித்துக்கட்ட சமூக மாற்றம் வேண்டுமா? முதலில் உங்களுக்குள் இருக்கும் சாதி வேறுபாட்டை ஒழித்துவிட்டு வா பார்ப்போம்.
முடிவுரை
இஸ்லாமியர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்க வேண்டும் என்ற நோக்கோடு கொண்டுவரப்பட்ட திட்டம் தான் CAA, NRC போன்ற மக்கள் விரோத சட்டம்.
இஸ்லாமியர்களின் கட்டுக்கோப்பை குழைக்க வேண்டும், அவர்களுக்குள் குழப்பத்தை உண்டாக்க வேண்டும் என்ற கேடு கெட்ட நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட சட்டம் தான் முத்தலாக் தடைசட்டம்.
(ஆனால் அது எங்களுக்கு சாதகமாக மாறியதே உண்மை.) இப்படி ஒருதலைபட்சமாக முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை கொண்டுவந்து செயல்படும் ஒன்றிய காவி அரசை கேள்வி கேட்க பயந்து நடுங்கும் கோழைகள் (நியூஸ்18 – News18) என்றுமே ஆடு நனைகின்றது என அழும் ஓநாய்களே…
காவி அரசுக்கு முட்டுக்கொடுக்கும் வேலையை மட்டும் சிறப்பாக பார்க்கும் நியூஸ்18 அதனை உன்னோடு வைத்துக்கொள். இஸ்லாமிய சமூகத்தின் மீது திணிக்காதே.
ஒன்றிய காவி அரசின் தொடர்ச்சியான முஸ்லிம் விரோதப்போக்கு நாட்டிற்கு பெரும் சாபக்கேட்டையே கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை.
பொது சிவில் சட்டம் வேண்டவே வேண்டாம்! ஒற்றுமைக்கு ஊறு.. சட்ட ஆணைய தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
முந்தைய பதிவை படிக்க Deepfake Technology – எதிர்கால சந்ததிகளின் வாழ்வை சீரழிக்குமா?