My Society – வஞ்சிக்கப்படும் என் சமுதாயம்
வஞ்சிக்கப்படும் என் சமுதாயம்-அதனால்
கெஞ்சி நிற்குதடா தெருவோரம்…
கஞ்சிக்கு வழியில்லையடா தினந்தோரும்-அதனால்
அஞ்சி ஓடுதடா தொலைதூரம்…
வெஞ்சிறையில் வாழும் அநியாயம்-அதிலும்
கொஞ்சம் கூட இல்லையடா பரிதாபம்…
கொஞ்சி பேசாத ஆதங்கம்-அதனால்
பிஞ்சி மனங்களில் விபரீதம்…
நஞ்சி கொடுக்குதடா அரசாங்கம்-அதனால்
விஞ்சி நிர்க்குதடா மதச்சாயம்…
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்
எமது முந்தைய பதிவை படிக்க… unite – ஒன்றுபட்டு வாரீர்..!