எப்படி இருந்த சமுதாயம் இப்படியாச்சி
அன்று சாவை சுகமாய் கருதிய சமுதாயம்…
இன்று வாழ்வை வளமாய் தேடுது பரிதாபம்…
அன்று சுவனத்தை சுவைக்கத்தான் விரும்பியது சமுதாயம்…
இன்று செல்வ சுகத்துக்காய் அழைகிறது பரிதாபம்…
அன்று சமூக தீமைகளை சத்தியத்தால் சாய்த்த சமுதாயம்…
இன்று பன்முக தீவினையின் அசத்தியத்தால் சாய்ந்த பரிதாபம்…
அன்று பக்கத்து வீட்டான் பசியை போக்கிய சமுதாயம்…
இன்று பக்கத்திலிருப்பவனை கூட பாராத பரிதாபம்…
அன்று மதுவை மண்ணில் கொட்டிய சமுதாயம்…
இன்று மதுவால் மண்ணில் புரளும் பரிதாபம்…
அன்றும் இன்றும் ஒரே இறை…
அன்றும் இன்றும் ஒரே மறை…
ஆனபோதும் மாற்றம் ஏனோ?
காரணம் தேடி அழைந்தோம் – கிடைத்தது விடை…
அன்று படிந்தது மனதில் இறை மறை…
இன்று படிந்தது மனதில் பெரும் கறை…
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்
முந்தைய பதிவை படிக்க : இஸ்லாமும் முஸ்லிம்களும்