Tag Archives: அரசியல்

பாஜகவின் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல்

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்று உலகு போற்றும் உன்னதமான நாடு நமது தாய்த் திருநாடு. உலகின் எந்த நாட்டிலும் இல்லாத ஒரு சமூக கட்டமைப்பு இந்தியச் சமூகத்தின் கட்டமைப்பு மட்டுமே. இதனை தகர்த்தெரியும் நோக்கத்தோடு இந்தியாவில் செயல்படும் பாசிச ஆர்.எஸ்.எஸ் தனது சித்தாந்தத்தை மக்கள் மீது திணித்து பிளவுபடுத்தி ஆள திட்டம் தீட்டி சதி வேலையில் இறங்கி செயலாற்றி வருகின்றது. ஆர்.எஸ்.எஸ் ஸின் …

Read More »

ஏழைகளின் எட்டாக்கனி மருத்துவம்

கண்ணியத்திற்குரிய சமுதாய சொந்தங்களே நம் அனைவரின் மீதும் இறைவனின் அமைதியும் சமாதானமும் உண்டாவதாக. இன்று பலரும் பேசத் தயங்கும் ஏழைகளின் எட்டாக் கனியாய் ஆகிப்போன மருத்துவம் குறித்த விழிப்புணர்வு பதிவு இன்றைய கால கட்டத்தில் மருத்துவம் என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி வருவது யாரும் மறுக்க முடியாததாகும். மருத்துவ சிகிச்சை பலனின்றி இறக்கும் 70 சதவிகித மக்கள் ஏழைகளாக இருப்பதின் மூலம் இதனை அறியலாம். ஒரு ஏழ்மையானவன், சாதாரண நோய்களுக்கு மருத்துவமனையை …

Read More »

மக்களின் மவுனத்திற்கு அர்த்தங்கள் என்ன?

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, சுதந்திர நாடு, குடியரசு நாடு என நாம் சொல்லிக்கொள்ளும் அதே வேளையில் மதம் சார்ந்தும், சுதந்திரம் இல்லாமலும் இருக்கும் நாடாகவே இன்றைய இந்தியாவை நாம் காணுகின்றோம்.சுதந்திர இந்தியாவில் மட்டும் அல்ல அதற்கு முந்தைய காலங்களில் கூட இல்லாத அளவிற்கு மத்திய காவி அரசின் அடாவடித்தனமும், அநீதியும், தாண்டவமாடிக்கொண்டிருப்பதையும் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பதட்டத்தை ஏற்படுத்திவருவதையும் மக்களாகிய நாம் உற்று நோக்கிக் கொண்டுதான் இருக்கின்றோம். …

Read More »

குத்தகை விடுவது நியாயமா?

தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கும் இத்தருணத்தில் என் சமூகத்திற்கு சில வேண்டுகோள்களை வைக்க ஆசைப்படுகின்றேன். இன்று தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து கொண்டுள்ள திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் முஸ்லிம்களுக்கும் பிரத்தியேகமாக தேர்தல் நேரத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தலில் வாக்களிக்கும் தினம் வரை 3 மாதங்கள் நம்மை பற்றி சிலாகித்து பேசுவதும், கவர்ச்சியான …

Read More »

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்…

அன்புள்ளம் கொண்ட சமூக சொந்தங்களே… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… தமிழகம் என்றாலே அதிமுக, திமுக என இரு கட்சிகள் தான் என்ற நிலை என்று மாறும் என வழி மேல் விழிவைத்து காத்திருக்கும் தமிழக மக்களின் எண்ணம் நிறைவேறும் காலம் வெகு தூரத்தில் இல்லை. மது, ஊழல், லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம், அடக்குமுறை, வஞ்சகம், துரோகம் என அனைத்தையும் இரு அரசியல் கட்சிகளும் மாறி மாறி செய்வதும் தேர்தல் காலங்களில் …

Read More »

தமுமுக கடந்து வந்த பாதை

அன்பும் பாசமும் நிறைந்த சமுதாய சொந்தங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… நெடிய பயணம்… இது நெடிய பயணம்… கொடிய சதியாவும்… தவிடு பொடியாகி… முடியும் தருணம்… என்ற கொள்கை முழக்கத்தோடு 1995ம் ஆண்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டு 19 ஆண்டுகளை கடந்து 20 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. பல்வேறு தடைகளை உடைத்தெறிந்தும், பல்வேறு வேதனைகளை சாதனைகளாக்கியும், பல்வேறு துயரங்களை உயர்ந்த சிகரங்களாக்கியும், களப்பணிகளிலே கலங்காது நின்ற …

Read More »